full screen background image

‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலை ஒளிபரப்ப தடை…!

‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலை ஒளிபரப்ப தடை…!

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. பழங்குடியின மக்களுக்கான மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் ஒட்டு மொத்த வசூல் தற்போது 150 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது என்று திரைத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த ‘காந்தாரா’ படத்தின் இறுதிக் காட்சியில் ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் கேரளாவை சேர்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக் குழுவின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘நவரசம்’ என்ற பாடலுடன் ஒத்துப் போவதாகவும், இரண்டு பாடல்களுக்கும் தவிர்க்க முடியாத பல ஒற்றுமைகள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ‘வராஹ ரூபம்’ பாடல் ‘நவரசம்’ பாடலின் காப்பி என்பதால் காந்தாரா படக் குழுவின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக் குழு தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, “காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ள இந்தப் பாடலை தடை செய்ய வேண்டும்…” என்று கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ‘தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக் குழு’ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை விதித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோன்று Amazon, Youtube, Spotify, Wynk Music, JioSaavn போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தப் பாடலைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

Our Score