‘திருட்டு விசிடி’ படத்துக்கெதிராக வழக்கு..!

‘திருட்டு விசிடி’ படத்துக்கெதிராக வழக்கு..!

ஒரு படம் கோர்ட் சிக்கலே இல்லாமல் வெளியானால்தான் ஆச்சரியம். கோர்ட் படியேறினால்தான் அதற்குக் கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என்பார்கள். இப்போது இன்றைக்கு ரிலீஸாகியிருக்கும் ‘திருட்டு விசிடி’ படத்திற்கும் அந்த விளம்பரம் கிடைத்துள்ளது.

ரங்கா புரொடக்சன் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்தன், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “என்னுடைய ரங்கா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘திருட்டு விசிடி’ என்ற படத்தை தயாரித்தேன். பின்னர், பிரபாகரன் என்பவருடைய பப்பட் ஷோ கிரியேஷன் நிறுவனத்தின் பெயரில் இந்த படம் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பு செலவுகளை நாங்கள் இருவரும் சேர்ந்தே செய்தோம்.

இந்த நிலையில், என்னிடம் 57 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பிரபாகரன் எனக்கு வழங்கினார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்டு மாதம் எனக்கு தெரியாமல், படத்தின் உரிமையை வைபிரண்டு மூவிஸ் நிறுவனத்துக்கு பிரபாகரன் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, இந்த படம் வியாழக்கிழமை(இன்று) சென்னையில் 10 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. எனவே இந்த தியேட்டர்களில் வசூலாகும் பணத்தை ‘பப்பட் ஷோ கிரியேஷன், வைபிரண்டு மூவிஸ்’ ஆகிய நிறுவனங்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும்…” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த 6-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி, ‘இந்தப் படத்திற்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, பப்பட் ஷோ கிரியேஷன் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

Our Score