full screen background image

‘துருவங்கள் பதினாறு’ படம் பற்றி ரசிகர்களுக்கு போட்டி அறிவிப்பு..!

‘துருவங்கள் பதினாறு’ படம் பற்றி ரசிகர்களுக்கு போட்டி அறிவிப்பு..!

வரும் டிசம்பர் 29-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ படம் ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்பை கொண்டுள்ளது.

இதன் உருவாக்கம் நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன், இது தொடர்பாக ரசிகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் செய்தியில், “இந்தப் படத்தின் திரைக்கதை முன்னும், பின்னும் நடந்த சம்பவங்களை தொகுத்து அளிக்கும்விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் எந்தெந்த காட்சிகள் வரிசைக்கிரமமாக வருகின்றன என்பதை வரிசைப்படுத்தி எழுதியனுப்பினால், அவர்களுக்கு மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார். பதில் அனுப்பும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்து கொடுக்கப்படுமாம்.

விடைகளை உடனடியாக knightnostalgia@gmail.com என்ற மெயில்முகவரிக்கு அனுப்ப வேண்டும்..” என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முந்துங்கள் ரசிகப் பெருமக்களே..!

Our Score