full screen background image

கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒத்துக் கொண்ட அரவிந்த்சாமி..!

கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒத்துக் கொண்ட அரவிந்த்சாமி..!

“வியாபாரம்  என்பதையும் தாண்டி எங்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக இணைத்த திரைப்படம் ‘போகன்’….” என்று ‘போகன்’ இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளரும், நடிகருமான பிரபுதேவா. 

bogan-poster-3

தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர், வித்தியாசமான கதை களங்களை உருவாக்கும் ஒரு இயக்குநர், சிறந்த நட்சத்திர கூட்டணி மற்றும் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் என இவர்கள் அனைவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், ஆர்வத்திற்கும் அளவே இருக்காது.

அப்படியொரு திரைப்படமாக உருவாகியிருக்கிறது, ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா – டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து, ரோமியோ ஜூலியட் புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் ‘போகன்’ திரைப்படம்.

‘போகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 3-ம் தேதியன்று மாலை சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் சர்வதேச பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.

dcim-80

இந்த விழாவில் தயாரிப்பாளர் பிரபுதேவா, ஐசரி கே.கணேஷ், நடிகர் ஜெயம் ரவி, நடிகை ஹன்ஸிகா மோத்வானி, இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் லஷ்மண், விநியோகஸ்தர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

jayam ravi

விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இந்த ‘போகன்’ மிக பெரிய மைல் கல்லாக அமையும் என முழுவதுமாக நம்புகிறேன்.

இந்த ‘போகன்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக அரவிந்த்சுவாமி  சாரை நான் அணுகியபோது, அவர் என்னிடம் ‘இப்போதுதான் நம்முடைய தனி ஒருவன்’ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதற்குள் மீண்டும் நாம் இருவரும் கை கோர்ப்பது சரியாக வருமா என்று யோசி…’ என்றார். ஆனால் ‘போகன்’ படத்தின் கதையை கேட்ட அடுத்த நொடியே, ‘இந்தப் படத்தில் நடிக்கிறேன்’ என்று உறுதியாகச் சொன்னார்…” என்றார். 

நடிகரும், தயாரிப்பாளருமான பிரபுதேவா பேசும்போது, “மின்சார கனவு’ படத்தில் நானும், அரவிந்த் சுவாமியும் இணைந்து நடித்தோம். அப்போது எங்களுக்குள் ஒரு சிறிய அளவிலான நட்புதான் இருந்தது. ஆனால் தற்போது ‘போகன்’ திரைப்படம் மூலம் எங்களுக்குள் இருந்த நட்புறவு மேலும் வலு பெற்றுள்ளது.


prabhu deva

இயக்குநர் லட்சுமணனின் புதுமையான கதையம்சம், இந்த படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கும் ஜெயம் ரவி மற்றும் நடிப்பின் மீது காதல் கொண்டிருக்கும் ஹன்சிகா என எங்களின் ‘போகன்’ படத்தில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றது. அவை நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்….” என்று உற்சாகமாக கூறினார் ‘போகன்’ படத்தின் தயாரிப்பாளரான பிரபுதேவா.

Our Score