M.J.D. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.மணிகண்டன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘திரைக்கு வராத கதை.’
இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில் இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட ஆண்களே இல்லை என்பதுதான். முழுக்க, முழுக்க பெண்களே நடித்துள்ளனராம்.
மம்முட்டி, மோகன்லால் மற்றும் கேரளாவின் முன்னனி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கிய மலையாள இயக்குநரான துளசிதாஸ், தமிழில் இயக்கும் முதல் படம் இது.
இந்தப் படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபீதா ஆனந்த் மற்றும் பல முக்கிய நடிகைகள் நடித்துள்ளனர்.
இசை – M.G.குமார், பின்னணி இசை – அரோல் கொரோலி, ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர். வசனம் – துரைப்பாண்டியன். பாடல்கள் – தமிழமுதன், பரிதி, சக்தி கிருஷ்ணா. சண்டை பயிற்சி – ‘மாஃபியா’ சசி, எழுத்து, இயக்கம் – துளசிதாஸ்.
ஃபிலிம் இண்ஸ்டிட்யூட் மாணவிகள் சிலர் ஒன்று சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எடுக்கும் கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள், நிஜமாகவே உண்மை சம்பவங்களாக மாறுகின்றன. இது ஏன்.. எப்படி.. என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் திரைக்கதை திரில்லர் கதையோட்டத்தில், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்தவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
பாடல்கள், ட்ரெய்லர் மூலம் கவனம் ஈர்த்த இந்த திரைப்படத்தை, ராகுல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த அக்டோபரில் வெளியிடுகிறது.












