full screen background image

‘மோ’ படத்தை வெளியிடுகிறது வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்.

‘மோ’ படத்தை வெளியிடுகிறது வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்.

“நல்ல படங்களை வெளியிடுவதே எங்கள் தாரக மந்திரம் என்று கூறுவதோடு நில்லாமல், தரமான படங்களின் தரத்தையும் உயர்த்த வருகிறது” ‘வெங்கிஸ்  பிலிம் இண்டர்நெஷனல்’ என்கிற புதிய திரைப்பட விநியோக நிறுவனம்.

ஒரு வெற்றி படம் அமைவதற்கு நல்ல இயக்குநர், தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மட்டும் போதாது. அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், விளம்பர நிறுவனங்களின் பணி முக்கிய பங்கு வகிக்கின்றது.

venkatesh raja-1

தனது பல வருட திரைப்பட விநியோக அனுபவத்தின் மூலம், பல வெற்றி படங்களுக்கு துணை நின்ற விநியோகஸ்தர் வெங்கடேஷ் ராஜா, தற்போது ‘வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்’ என்கிற நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல் தனது முதல் படைப்பாக WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட்  என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்த ‘மோ’ திரைப்படத்தை விமர்சையாக வெளியிடவுள்ளது.

DSC_9699

காமெடி கலந்த திகில் படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் சன் மியூசிக் தொகுப்பாளர் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘காக்கா முட்டை’ மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘இறைவி’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ படத்தில் நடித்துள்ள பூஜா தேவரியா,  ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ மற்றும் பல படங்களில் நடித்த செல்வா, ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்த முனீஸ்காந்த், யோகி பாபு, ‘மெட்ராஸ்’ மற்றும் ‘மாரி’ படங்களில் நடித்த ‘மைம்” கோபி, ‘ராஜ தந்திரம்’ படத்தில் நடித்த சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை புவன் நல்லான்.R என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் செல்வா மற்றும் ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியனிடம் இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணு ஸ்ரீ.கே ஒளிப்பதிவு செய்ய, ‘இனிமே இப்படிதான்’ திரைப்படத்தின் இசை அமைப்பாளரும், A.R.ரகுமானின் உதவியாளருமான சமீர்.டி.சந்தோஷ் இசையமைத்துள்ளார். கலை – பாலசுப்ரமனியன், பட தொகுப்பு – கோபிநாத்.

இத்திரைப்படத்தின் வெளியீடு தேதி விரைவில் வெளியடப்படும் என்று கூறும் வெங்கடேஷ் ராஜா, தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடும் திட்டமுள்ளதாகவும், வெகு விரைவில் படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Our Score