full screen background image

‘வீர சிவாஜி’ படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்

‘வீர சிவாஜி’ படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால், தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில்  ‘வீர சிவாஜி’ என்கிற படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

veera sivaji movie stills

இந்த ‘வீர சிவாஜி’ படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு,  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர்  நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – டி.இமான், படத் தொகுப்பு – ரூபன், வசனம் – ஞானகிரி, சசி பாலா, பாடல்கள்- யுகபாரதி, கபிலன், ரோகேஷ், கலை – லால்குடி இளையராஜா, நடனம் – தினேஷ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கதை, திரைக்கதை, இயக்கம் – கணேஷ் விநாயக், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்.

இந்தப் படத்தின் டீசரை நேற்று மாலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இது பற்றி இயக்குநர் கணேஷ் விநாயக் பேசும்போது, “வீர சிவாஜி  படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைய உள்ளது. இந்தப் படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் வெளியிட கேட்டபோது டீசரை பார்த்த உடனேயே ‘அருமையாக உள்ளது.  நான் கண்டிப்பாக  வெளியிடுகிறேன்’ என்று சொல்லி வெளியிட்ட கையோடு எங்களையும் மனதார வாழ்த்தினார்.

veera sivaji

“டீசர் நன்றாக உள்ளது படம் நிச்சயமாக வெற்றியடையும் அது இந்த டீசரை பார்த்தாலே தெரிகிறது பட குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..” என்று பாராட்டினார்.

சமீபத்தில் இந்த படத்திற்காக யுகபாரதி எழுதி  D.இமான் இசையமைத்து ஸ்ரேயா  கோஷல் – ஸ்ரீராம் பார்த்தசாரதி குரல்களில் உருவான  ‘அடடா அடடா என் தேவதையே…  இதுநாள்வரையில் என் விழிகள் தேடலையே..’ என்ற பாடல் காட்சி தினேஷ் மாஸ்டர் நடன அமைப்பில், எம்.சுகுமார் ஒளிப்பதிவில் விக்ரம் பிரபு – ஷாம்லி நடனமாட, ஜார்ஜியா ஜார்ஜியா நாட்டில் உள்ள கஸ்பகி என்ற ஊரில் இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினோம். அந்த பாடல் காட்சி  மிகவும் நன்றாக வந்திருகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர் கணேஷ் விநாயக்.

Our Score