பிரபு தேவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் வழங்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படப்பிடிப்பு முடிந்து படம் வெளிவரும் தருவாயில் உள்ளது.
முழுக்க, முழுக்க நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஜனரஞ்சகமான படமான இந்தப் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை யாமினி கௌதம் நடித்துள்ளார்.
அவர்களுக்குள் நடக்கும் ஒரு இனிமையான காதல் நாடகமும், அதற்கு இணையாக சந்தானமும், வி.டி.வி. கணேஷும் நடிக்கும் ரகளையான நகைச்சுவையும் படத்துக்கு மிக சிறந்த பலமாகும்.
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘கொரியர் பாய் கல்யான்’ படத்தின் இசை கடந்த வாரம் வெளியாகி ஆந்திராவில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தின் பாடல் ஒன்று, இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்கத்துக்கு மீண்டும், மீண்டும் படையெடுத்து வருவார்கள் என தான் நம்புவதாக உறுதியுடன் கூறுகிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன்.










