இசையமைப்பாளர், பாடகர் என்பதிலிருந்து பிரமோஷன் பெற்று நடிகராகியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.
தனுஷ் ஹீரோவாக தற்போது நடித்து வரும் மாரி படத்தில் அனிருத்தும் நடிக்கிறாராம். இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு நாயகனாகவும், ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.
மேலும் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இப்போது அனிருத்தும் நடிகராகியிருக்கிறார்.
அனிருத்தின் இசையமைப்பில் உருவான ஒரு பாடலுக்கு அனிருத், தனுஷ் ஆடிப் பாடும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன.









