கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’ என்ற படத்தையும், ‘அருவி’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.
இந்த நேரத்தில் தொடர்ந்து தைரியமாக மூன்றாவதாக ‘மானே தேனே பேயே’ என்ற படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தை ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுபஸ்ரீ கங்குலி நடிக்கிறார். இவர் வங்காள மொழியில் 15 படங்களுக்கு மேல் நடித்து அங்கு முதல் தர கதாநாயகியாக உள்ளார். மற்றும் டேனியல் பாலாஜி, சஞ்சனா, சென்ட்ராயன், செவ்வாளை, மயில்சாமி, மீரா கிருஷ்ணன், மதுமிதா, அர்ஜுனன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எம்.எஸ்.பிரபு
இசை – சத்யா. C
வசனம் – ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன்.
கலை – சஞ்சய்
எடிட்டிங் – சுபராக்
பாடல்கள் – யுகபாரதி, விவேகா, கிருஷ்ணா.
இணை இயக்கம் – கண்ணன் பொன்னைய்யா.
தயாரிப்பு – கல்சன் மூவீஸ்(பி)லிட்
எழுதி இயக்கும் கிருஷ்ணாவிடம் படம் பற்றி கேட்டோம்..
“சில்லுன்னு ஒரு காதல்’ படத்தை காதல் கதையாக உருவாக்கினேன். ‘நெடுஞ்சாலை’யை ஆக்சன் படமாக உருவாக்கினேன். இப்போது மூன்றாவதாக நான் இயக்கும் ‘மானே தேனே பேயே’ படம் வேறு மாதிரியான கதைக் களத்தை மையப்படுத்தியது.
படத்தில் நடிகர் ஆரி, சாண்டி என்றழைக்கப்படுகின்ற சந்தானம் என்ற சாப்ட்வேர் இளைஞராக நடிக்கிறார். டேனியல் பாலாஜி இதுவரை ஏற்றிராத வேடமேற்று நடிக்கிறார். தொடர்ந்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று ஒரே கட்டத்தில் முடிவடைகிறது. சம காலத்து இளைஞர்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் படமாக இந்த ‘மானே தேனே பேயே’ உருவாகி வருகிறது..” என்றார் இயக்குனர் கிருஷ்ணா.









