அனைவருக்கும் கல்வி ! காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம் ! இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம் !!!
கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்ரீராம் பிலிம் பேக்டரி தயாரிக்கும் ‘வஜ்ரம்’ பட குழுவினர் நடத்திய ‘மாரத்தான்’ போட்டி. இன்று 23.11.2014 காலை 8.30 மணியளவில் மெரினா கடற்கரையில் நடைபெற்றது. அண்ணா சதுக்கத்திலிருந்து கலங்கரை விளக்கம்வரையிலும் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், நடிகர்கள் தம்பி ராமையா, ஜெயபிரகாஷ், சித்ரா லட்சுமணன், விசென்ட் அசோகன், மற்றும் ‘வஜ்ரம்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி, படத்தின் இயக்குனர் S.D.ரமேஷ்செல்வன் மற்றும் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.







































