full screen background image

நடிகர் ஜீவனை கரை சேர்ப்பாரா ஷக்தி சிதம்பரம்..!

நடிகர் ஜீவனை கரை சேர்ப்பாரா ஷக்தி சிதம்பரம்..!

லொள்ளு, நக்கல், நையாண்டி காமெடிகளுக்கு பெயர் பெற்றவர் ஷக்தி சிதம்பரம் இவரும் சத்யராஜும் இணைந்து பல வெற்றிப் படங்களை படைத்திருக்கிறார்கள்.

அத்துடன் பிரபு, பிரபுதேவா, பார்த்திபன், சுந்தர்.சி, சிபிராஜ், லாரன்ஸ், கருணாஸ் என நிறைய நடிகர்களை வைத்து பல படங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இவரது பாணி சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இவர் கடைசியாக கருணாஸை ஹீரோவாக வைத்து இயக்கிய ‘மச்சான்’ படம் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தயாராகியும் இன்னமும் திரைக்கு வரவில்லை..!

இந்த நிலையில் இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘ஜெயிக்கிற குதிர’. இதில் கதாநாயகனாக ஜீவன் நடிக்கிறார். சில வருட இடைவெளிக்கு பிறகு ஜீவன் நடிக்கும் படம் இது. கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, அம்பிகாசோனி, திராவியா நடிக்கிறார்கள்.

மற்றும் சரண்யா, ஜெயபிரகாஷ், கருணாகரன், தம்பி ராமையா, ஜி.ஆர், கோவை சரளா, சிங்கம் புலி,மனோபாலா, மயில்சாமி, இமான்அண்ணாச்சி,மதுமிதா, சித்ரா லட்சுமணன் இவர்களுடன் பவர்ஸ்டார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிங்கி புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் பியாரிலால் K.குந்தேச்சா அதிக பொருட் செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஆஞ்சநேயலு

இசை – ஸ்ரீகாந்த்தேவா

பாடல்கள் – வைரமுத்து, மதன்கார்க்கி

எடிட்டிங் – ரஞ்சித்

கலை – ஆர்.கே.விஜய்முருகன்

நடனம் – தினேஷ்

ஸ்டண்ட் – தளபதிதினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எம்.சேகர்

இணை இயக்கம் – அண்ணாதுரை கண்ணதாசன், காமராஜ்

தயாரிப்பு – பியாரிலால் K.குந்தேச்சா

எழுத்து-இயக்கம் – ஷக்திசிதம்பரம்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “முடியாது என்பது முட்டாள்தனம். முடியும் என்பது மூலதனம் என்கிற ஆறு வார்த்தைகள்தான் இந்தப் படத்தின் கதைக் களம் ! இதை வைத்து காமெடி, காதல், கலாட்டா படமாக இது உருவாகப் போகிறது. 21-ம் தேதி படப்பிடிப்புடன் துவக்க விழா நடைபெற்று தொடர்ந்து அறுபது நாட்களில் படப்பிடிப்பு முடிவடைகிறது. சென்னை, பாண்டி, மும்பை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது..” என்றார்.

Our Score