எப்போதும் விஜய் படமு்ம், அஜீத் படமும்தான் முக்கிய பண்டிகை நாட்களில் போட்டியிடும். ஆனால் வரும் பொங்கல் தினத்தன்று விக்ரமின் ‘ஐ’ படமும், அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படமும் ரிலீஸாகும் என்று இரு தரப்புமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
100 கோடிக்கும் மேலாக தயாரிப்புச் செலவை முழுங்கியிருக்கும் ஐ திரைப்படம் விக்ரமின் கேரியருக்கு மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. அதேபோல் அஜீத்திற்கும் ‘பில்லா-2’-வின் தோல்வி மற்றும் ‘வீரம்’ படங்களின் சுமாரான வெற்றியினால் அடுத்து வரவிருக்கும் என்னை அறிந்தால் படமும் முக்கியமான படமாக இருக்கிறது.
அதோடு அன்றைக்கு விஷால் தயாரிப்பில் – நடிப்பில், சுந்தர்.சி இயக்கியிருக்கும் ‘ஆம்பளை’ படமும் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய இரண்டு படங்களுமே அதிக தியேட்டர்களை கைப்பற்றும் சூழ்நிலை இருப்பதால் ‘ஆம்பளை’ படத்தின் ரிலீஸை உறுதியாகச் சொல்ல முடியாது..!
எப்படியிருந்தாலும் அடுத்த பொங்கல் சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான விஷயம்தான்..!









