ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘இருவர்’ என்ற இசைப் படைப்பின் ஆடியோ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
இசை என்பது மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான மொழிகளில் ஒன்று.
காதல், நட்பு, உறவு, அன்பு போன்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல்வேறு உணர்வுகளை இனிமையான இசை எளிதில் கடத்தி விடும்.
அத்தகைய காதல் மற்றும் மனித உறவுகளின் உணர்வுகளை மையப்படுத்தி இப்படைப்பு உருவாகியுள்ளது.
இந்த இசைப் படைப்பை ‘ஜடா’ படத்தின் இயக்குநர் குமரன் எழுதி, இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் அதிதி ஷங்கர் பாடியுள்ள இப்பாடலை ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.
நிவாஸ் கே.பிரசன்னா, சூரஜ் சந்தோஷ் ஆகியோர் அதிதி ஷங்கருடன் சேர்ந்து பாடியுள்ளனர்.
வினோத் குமார், புஷ்பகலா, குமரன் இருவரும் இணைந்து இந்த இசைப் படைப்பைத் தயாரித்துள்ளனர்.









