full screen background image

விரைவில் வருகிறது ‘விசாரணை கைதி’ திரைப்படம்!

விரைவில் வருகிறது ‘விசாரணை கைதி’ திரைப்படம்!

விஜி சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நா. வெங்கடேசன் தயாரித்துள்ள திரைப்படம் ‘விசாரணை கைதி’. 

இந்தப் படத்தில் விகடன், உன்னி கிருஷ்ணன், விருத்திகா ஸ்ரேயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சந்திரன் சாமி, இசை – நரேஷ் விஜய், படத் தொகுப்பு – சதீஷ்குமார், பின்னணி இசை – பொன் பிரசாந்த், சண்டை பயிற்சி – அசால்ட் மதுரை, பாடல்கள் – கலைக்குமார், கோ.சரவணன், பாடகர்கள் – அனுராதா ஸ்ரீராம், பிரசன்னா, சிபி சீனிவாஸ், தீபிகா வரதராஜன், எழுத்து, இயக்கம் எஸ்.ஆர். மணிகண்டன்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் பேசும்போது,

“ஒரு சிறு கிராமத்தில் சுருளி என்கிற இளைஞன் வாழ்ந்து வருகிறான். அவன் வாழ்க்கையில் திடீரென்று ஏற்படும் ஒரு நிகழ்வால் அவன் வாழ்க்கைப் பாதை மாறுகிறது. அதன் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படம்.

‘சுருளி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் விகடன் மிகவும் கச்சிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதேபோல் காவல்துறையின் கம்பீரம் சிறிதும் குறையாமல் உன்னி கிருஷ்ணன் காவல்துறை அதிகாரியாக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளும் அவரவர் கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.

MUOOOUM MEDIA இந்தப் படத்தை சிறப்பாக வடிவமைத்து கொடுத்துள்ளனர். தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்றார்.

Our Score