full screen background image

டிரோன்ஸ் – சினிமா விமர்சனம்

டிரோன்ஸ் – சினிமா விமர்சனம்

நடிகர்கள்:- சித்தி இதாத்னானி, அஞ்சலி நாயர், திராவிட் செல்வம், தேவதர்ஷினி, குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வாராஜ், ஆர்.ஜே. தீபக்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-

தயாரிப்பாளர்: ஜி.எம். மோர்கன்
தயாரிப்பு நிறுவனம்: ஜி.எம். மோர்கன் ஃபிலிம்ஸ்
எழுத்து – இயக்கம்: ஆர். ராகவ் மிருதத்
ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன்
இசை: ஹரி எஸ்.ஆர்
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா
கலை இயக்கம்: ஆர். கிஷோர்
ஆடை வடிவமைப்பு: ஹர்ஷிகா ரமேஷ்
கிரியேட்டிவ் புரொட்யூசர்: சினிமாவுட் பிக்சர்ஸ், சினிமாவாலா சதீஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: பூரணி கிரிதரன்
தயாரிப்பு நிர்வாகி: எம். கே. சாய் சுந்தர்
நடன இயக்கம்: பாபி அந்தோணி
சண்டைப் பயிற்சி: பி.சி. ஸ்டண்ட்ஸ்
ஒலிப்பதிவு: ஹரீஷ்
ஒலி வடிவமைப்பு: அருண் எஸ். மணி
மேக்கப்: மத்தின கிரிபாபு
வி.எஃப்.எக்ஸ்: பால்கன் பி. கௌதம்
கலரிஸ்ட்: ஜி. பாலாஜி (ஜி.பி கலர்ஸ்)

பத்திரிக்கை தொடர்பு : சதீஷ் (TEAM AIM)

கஷ் என்ற கிஷோர் தஸ் என்ற ஆர் ஜே தீபக் கஸ் என்ற சுரளா… இந்த மூவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள் மூவரும் விரும்பிய நண்பர்கள்.

ஒரு நாள் இரவில் இவர்கள் மூவரும் ஊர் சுற்றி வர அந்த நேரத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த தகவல் கல்லூரிக்கு தெரிய வர இவர்கள் மூவரும் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்கிறார் கல்லூரி முதல்வர்.

இந்த விவகாரத்தை தங்களுடைய குடும்பத்தினருக்கு சொல்லாமல் மறைக்கும் இந்த மூவரும் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் ஒரு பத்து நாட்கள் எங்காவது வெளியில் தங்கி கொள்ளலாம் என்று பிளான் செய்கிறார்கள்.

உங்களுடன் படிக்கும் ஒரு மாணவரின் உதவியுடன் நகரத்தின் ஒதுக்குப்புறமாக இருக்கும் பிளாக் ஹோல் என்ற ஒரு விசித்திரமான வீட்டிற்குள் கால் வைக்கிறார்கள்.

அந்த வீட்டில் குரேசி என்ற விஞ்ஞானி பத்மநாபன் வித்தியாசமான ஒரு செட்டப்போடு வாழ்ந்து வருகிறார். இவருடைய வீட்டின் உட்புறம் அனைத்தும் மிகவும் நவீனமான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அதோடு அந்த வீட்டிலேயே அவர் ஒரு பெண் ரோபோவை உருவாக்கி இருக்கிறார் அந்த ரோபோவுக்கு உணர்ச்சிகள் இல்லாத ஒரு ஜடம் போல் அழகிரி இடம் செட் செய்து வைத்திருக்கிறார்.

அந்தப் பெண் ரோபோவும் இன்னமும் ஆராய்ச்சி செய்து முழுமை அடைந்தவுடன் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு அதை விற்று கோடீஸ்வரன் ஆகலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார் விஞ்ஞானி பத்மநாபன்.

இவர்கள் மூவரும் அவருடைய வீட்டுக்குள் நுழைய இவர்களை வரவேற்கும் பத்மநாபன் 10 நாட்கள் கழித்துதான் நீங்கள் மூவரும் வெளியில் போக வேண்டும் இடையில் வெளியில் போகவே முடியாது என்று மிரட்டி அவர்களை அங்கே தங்க வைக்கிறார்.

இவர்களுக்கு சாப்பாடு வாங்கித் தருவதற்காக குறைஷிக் கொடுத்திருக்கும் சம்பங்கி என்ற போனை டிபன் வாங்குவதற்காக வெள்ளியில் அனுப்புகிறார் கிஸ்.

ஆனால் அந்த ட்ரோன் அதை ஊரில் இன்னொரு இடத்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் ரவுண்டு அடிக்கிறது. அந்த வீட்டுக்குள் தேவதை போன்ற அழகான தோற்றத்தில் ‘பிரகருதி’ என்னும் சித்தி இத்னானி கண்களுக்கு தெரிகிறார்.

அவரைப் பார்த்த உடனேயே மைகள் கொள்கிறார்கள் அதேசமயம் கிறிஸ்டைன் தீவிரமாக ஒருதலை பட்சமாக காதலித்து வருகிறார் அஞ்சலி நாயர் ஆனால் அவரது காதலை தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் கிஸ்.

அதே சமயம் நகரத்தில் இரவு நேரத்தில் சில படுகொலைகள் தொடர்ந்து நடக்கின்றன யாரோ ஒரு சைக்கோ டான்சிங் சைக்கோ என்று அழைக்கப்படும் அவன் வித்தியாசமான முறையில் சில கொலைகளை தொடர்ந்து செய்து வருகிறான் அவன் தேடுவதற்காக அந்த பகுதியின் இன்ஸ்பெக்டர் ஆன சினிமாவாலா சதீஷ் தன்னுடைய ஒரு உதவியாளரோடு இரவு நேரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பிரகருதி என்ற சித்தி எத்தனை அணி இருக்கும் அந்த பால் அடைந்த பங்களாவில் பல மினியேச்சர் பொருட்கள் இருக்கின்றன அதே வீட்டில் அவ்வப்பொழுது இன்னொரு கிழவி பேயாக தேவதர்ஷணியும் அடிக்கடி தோன்றி வருகிறார்.

சித்தி இத்தன அடி மீது காதல் கொள்ளும் கிஷோர் ஒரு நாள் அந்த வீட்டில் இருந்து தப்பித்து சித்தி வீட்டுக்கு வருகிறார் அங்கே சித்திய சந்தித்து தான் அவளை காதலிப்பதாக சொல்கிறார்.

சூனியக்காரி கிழவியான தேவதர்ஷினி சித்தியைத் தானே தோற்றத்தில் இருப்பது கிஷோருக்கு தெரியாது. இது தெரியாமலேயே கிஷோர் சித்தி இடம் பேசுகிறார்.

நான் அலைகெடுத்து பொலிவிழந்து வயதான தோற்றத்தில் உன் கண் முன்னே தோன்றினாள் அப்போதும் நீ இதைத்தான் சொல்வாயா என்று கேட்கிறார் சித்தி.

கிஷோர் ஆமாம் என்று சொல்ல சித்தி உருவத்தில் இருக்கும் தேவதர்ஷினி சந்தோசமாகிறார். 

தேவதர்ஷினி ஆராயிரம் ஆண்டு கால முந்தைய மனித இனத்தை சேர்ந்தவர் 6000 ஆண்டுகளாக தன்னுடைய உண்மையான அழகை பார்த்து காதலிக்கும் ஆணை தேடிக் கொண்டிருக்கிறார் ஆனால் அப்படி இவர் தேடுகின்ற நபர்களெல்லாம் இவரது உண்மையான முகத்தை பார்த்தவுடன் ஓடிப்போக நினைக்கிறார்கள் அவர்களை எல்லாம் தன்னுடைய சக்தியினால் அடக்கி பொம்மைகளாக உருவாக்கி அவர்களை அந்த வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறார் சூனியக்காரி தேவ தர்ஷினி.

இப்பொழுது கொலை செய்யும் இடத்தில் இருந்த அஞ்சலியின் ஆயரும் தர்ஷம் கிஷோரை ரெடி சித்தியின் வீட்டுக்குள் நுழைகிறார்கள் இவர்களாலும் அந்த வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை.

அதே நேரம் போலீச இன்ஸ்பெக்டர் ஆன சினிமாவால சதீஷும் டான்சிங் சைக்கோ கில்லரை தேடி அந்த வீட்டுக்குள் நுழைகிறார் ஆக மொத்தம் படத்தில் இருக்கக்கூடிய அத்தனை கதாபாத்திரங்களும் அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சீமாவள சதீஷுக்கும் அவருடைய கைரேகை ஜோசியத்தின் மூலமாக அவர் யாரை மனச அதிகமாக காதலித்த ஐ லவ் யூ சொல்கிறாரோ அத்தை பெண் தலை வெடித்து இறந்து விடுவாள் என்ற ஒரு சாபக்கேடும் அவர் தலையில் எழுதி இருக்கிறது அப்படியும் விடாமல் அவர் தன்னுடைய சோல் மேட்டை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

இப்படி பல்வேறு கேரக்டர்ஸ் கட்சிகள் கொண்ட அனைத்து கதாபாத்திரங்களும் அந்த வீட்டுக்குள் சிக்கிக் கொள்ள அடுத்து என்ன நடக்கிறது தேவதர்ஷி நேரம் உண்மையான காதல் இல்லை கிஷோர் சொன்னாரா தேவதர்ஷினி அதை ஏற்றுக் கொண்டாரா முடிவு என்ன ஆனது என்பதுதான் இந்த ஹாரார், சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் திரைக்கதை.

பன் பட்டர் ஜாம் என்ற படத்தை இயக்கி தமிழ் திரைகள் அறிமுகமான இயக்குனர் தன்னுடைய அடுத்த இரண்டாவது படத்திலேயே இப்படி தைரியமாக புது முறை ஹீரோக்களை முன் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இந்த தைரியத்திற்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

டிஜிட்டல் தளத்தில் தன்னுடைய நடிப்புலக வாழ்க்கையை துவக்கிய திராவிட செல்வம் என்ற படத்தில் கிஷோராக முதன்மையினாயானாக நடித்துள்ளார்.

ஆர் ஜே பி ஜே கிழக்கு இருக்கும் அதே ஒன் லைன் காமெடி வரும் அளவுக்கான பேச்சுத் திறமையும் கொஞ்சம் நடிப்பும் கலந்து இந்த படத்தில் தன்னுடைய முதல் அறிமுக நடிப்பை கொட்டி இருக்கிறார். பரவாயில்லை. பாராட்டுக்கள்.

கருப்பு கலரில் இருப்பதால் கருப்பட்டி என்ற செல்ல பெயருடன் நடித்திருக்கும் அஞ்சலி நாயர் முதலிருந்து கடைசி வரையிலும் படத்தில் இருக்கிறார் ஒன் சைடாக திராவிட செல்வத்தை காதலித்தும் வருகிறார் அந்த காதலை இயக்கத்தை வெளிப்படுத்தும் இடத்திலும் தன் கருப்பாக இருப்பதால் அனைவரும் தன்னை புறக்கணிப்பதாக நினைத்துக் கொள்ளும் அந்த காட்சியிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். இறுதியில் அழகில்லாத காரணத்தினாலும் வயதான காலத்தில் கிழவி தோற்றத்தில் இருப்பதினாலும் தேவதர்ஷினியை அனைவரும் புறக்கணிக்கும் நேரத்தில் அவரை கட்டி அணைத்து நானும் உன்னை மாதிரி தான் என்று சொல்லி அழுகின்ற இடத்திலும் நம்முடைய பாராட்டுக்களை பெறுகிறார் அஞ்சலி நாயர்.

கதையின் மிக முக்கியமான கதாபாத்திரமான பிரகதி என்ற சித்தி எத்தனை அணி தேவதை என்ற தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

தேவதை உடையில் ஒரு தேவதை போலவே படம் நெடுகிலும் அவர் வரும் பொழுது பிரேம் முழுவதுமே அட்டகாசமாக தெரிகிறது அவருடைய அழகான முகத்துடன் நடிப்புடன் சேர்ந்து அவரது கன்னக்குலியும் நடித்திருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

அறிமுக கட்சியில் இருந்து கடைசி வரையிலும் 6000 வருட இயக்கத்தை தணித்துக் கொள்ளும் விதமாக முகத்தில் கடுமையை கொட்டி ஆக்ரோசமாக கத்திக் குவிக்கும் தேவதர்ஷினி கிளைமாக்ஸ் காட்சிகள் மனதை உருக்கும் அளவுக்கு உன்னதமாக நடித்திருக்கிறார்.

விஞ்ஞானி பத்மநாபன் ஆக நடித்திருக்கும் புரட்சி தன்னுடைய சின்னத்திரை அனுபவத்தை வைத்து சிறிசில காமெடிகளையும் விட்டுகளையும் வெளியில் விட்டு படத்தில் கொஞ்சம் நகைச்சுவையை மலர வைத்து இருக்கிறார். இடைவெளிக்கு பின்பு வரும் சில காட்சிகளில் அவருடைய வருகையும் படத்தை நகர்த்துவதற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

நண்பர்களே ஒருவராக நடித்திருக்கும் ஆர் ஜே தீபக் தன்னுடைய கேரக்டர் அவ்வப்பொழுது நகைச்சுவை துணுக்குகளை வீசியும் தன்னுடைய உடல் மொழியாலும் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

சினிமா பாலா சதீஷ்க்கு இது முதல் படம் அறிமுகப்படம் என்பதால் அவருடைய நடிப்பு பற்றி நாம் எதுவும் பேச வேண்டாம் என்னமோ ஒரு மிக சிறப்பான கேரக்டர் அவருக்கு கிடைத்தால் அது சிறப்பாக நடிப்பார் என்று எண்ணுகிறோம்.

இவருடைய உதவியாளர் போல் நடித்திருக்கும் சசி செல்வராஜூம் ஏதோ தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் முதன்மையான தொழில் நுட்ப வல்லுனர் என்றால் அது கலை இயக்குநர்தான். மிகச் சிறப்பாக தன்னுடைய பணியை செய்து இருக்கிறார்.

பிளாக் ஹோல் வீட்டின் உட்புறத்தை அவர் வடிவமைத்திருக்கும் விதமே அழகு அதை போல் சித்தியின் வீட்டிலும் அவருடைய கை வண்ணத்தில் அந்த வீடு ஜொலிக்கிறது.

 ஒளிப்பதிவாளர் ஜெயம் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை போரடிக்காத வண்ணம் ஒவ்வொரு கட்சியிலும் வேறு வேறு இடங்களில் கேமரா கோணங்களை மாற்றி அமைத்து படமாக்கி இருக்கிறார் சித்தியை தேவதை போல காட்டிய அழகுபடுத்தி இருப்பதில் இவருடைய கை வண்ணம் சிறப்பு.

இசையமைப்பாளர் ஹரியின் இசையில் இரண்டு பாடல்கள் திரையில் ஒலிக்கின்றன அவ்வளவுதான் ஆனால் பின்னணி இசை நகைச்சுவை இலையோட படம் முழுவதும் வலம் வந்திருக்கிறது ஒலிப்பதிவு சிம்ப்ளி என்றே சொல்லலாம்.

படத்தொகுப்பாளர் சதீஷ் இயக்குனர் கொண்டுவந்த குட்டி இருந்த காட்சிகளை எல்லாம் முடிந்த அளவுக்கு ஒரு சஸ்பெரியலர் ஹாரர் வரக்கூடிய அளவுக்கு தொகுத்து கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகர்ந்து நம்முடைய பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது

ஆனால், கடைசி 45 நிமிடங்கள்தான் இந்த படமே! இந்த நேரத்தில்தான் படத்தின் முழு கதையும் நமக்கு தெளிவாகப் புரிகிறது. புலனாகிறது. இந்த புரிதலை இயக்குனர் முதல் பாகத்திலும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

சூனியக்காரி தேவதர்ஷணியின் தோற்றம் பயங்கரமாக இல்லை என்றாலும் ரசிக்கும் வகையில் உள்ளது அதேபோல் தேவதை என்ற தோற்றத்தில் அணியும் படம் நெடுகிலும் வந்து நம்மை கவர்ந்து இழுக்கிறார். படத்தில் அனைவரின் உடை அலங்காரத்திலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கும் காஸ்ட்யூம் டிசைனருக்கும் நமது பாராட்டுக்கள். 

அதேபோல் கேரளாவுக்கே உரித்தான முக அழகோடு இருக்கும் அஞ்சலி நாயரை கருப்பட்டி என்று அழைக்கும் அளவுக்கு கருமையாக்கி அவருடைய நடிப்பை ரசிக்க வைத்திருக்கும் மேக்கப் வேண்டும் தேவதர்ஷினி சித்தி ஏத்தின இருவரின் ஒப்பனைக் கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

 வழமைத்ரா அம்புலி மாமா அவரை சித்ரா கதைகள் என்று பல குழந்தைகளுக்கான பத்திரிகைகளில் நான் படித்த சூனியக்காரியை கதாபாத்திரத்தை வைத்து இன்றைய இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் கதை திரைக்கதை எழுதி அதில் மாயாஜாலத்தை பொருத்தி உலகத்தை காட்டி தன்னுடைய இயக்கத்தினால் படத்தை கடைசி வரையிலும் பார்க்க வைத்திருக்கிறாய் இயக்குனர் ராகவ் மின்காந்த.

காதலில் அழகு என்பது தேவையில்லாதது அகத்தை விட அப்புறம் சிறந்து இருந்தாலே போதும் என்கின்ற இன்றைய காதலருக்கு ஏற்ற கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர்

ஆனால் இந்த முக அழகு இல்லாத பெண்களை எத்தனை ஆண்களின் போது காதலிக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்

ஆனால் அப்படி செய்யாதீர்கள் மனதை பாருங்கள் குணத்தை பாருங்கள் நடத்தையை பாருங்கள் என்று இதை இயக்குனர் இன்னமும் கொஞ்சம் வசனத்தை எளிய முறையில் மக்களுக்கு புரிவது போல சொல்லி இருக்கலாம்.

அதேபோல் டான்சிங் சைக்கோ கில்லரை படிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆவது உதவியாளரும் செய்யும் சில வேலைகள் நமக்கு கடுப்பை கிளப்பி இருக்கின்றன

உண்மைகள் இப்படி ஒரு போலீஸ் ஸ்டேஷன் எப்படி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்தியா முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் அப்படி ஒரு காமெடியை தயவு கேரக்டர்ஸ் கிச்சிலும் வைத்திருக்கிறார் இயக்குனர்

இது ஒன்றுதான் படத்தில் மிகப் பெரிய மைனஸ் பாயிண்டாக இருக்கிறது. 

மொத்தத்தில் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் படியாக ஒரு சஸ்பென்ஸ் கிரைண்டர் படமாக இதைக் கொடுத்திருப்பதால் சாதாரண பொது மக்களுக்கு எந்த படம் நிச்சயமாக பிடிக்கும் அவசியம் பாருங்கள்.

Our Score