full screen background image

புதுமுகங்கள் நடிப்பில் உருவான புதிய திரைப்படம் ‘கருப்பட்டி’!

புதுமுகங்கள் நடிப்பில் உருவான புதிய திரைப்படம் ‘கருப்பட்டி’!

மோனிதா மூவிஸ் தயாரிப்பில் விஜயராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் “கருப்பட்டி”.

இந்தப் படத்தில் விஜயராஜ், சமந்து, ஹரிணி, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கலைவாணி, ரஷீத், மைக்கேல் ராஜ், செண்பகவள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவை செந்தில் மாறன்- கவிநாதன் இருவரும் இணைந்து கவனித்துள்ளனர்.

படத் தொகுப்பையும், இசையையும் டி. எஸ். திவாகர் கவனிக்க, இஷாஸ் அகமது பாடல்களை எழுதி உள்ளார். ராம் முருகேஷ் நடன பயிற்சியையும், ரமேஷ் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

“காதல் பதிவு”, “நந்திவரம்”, “சினிமா கனவுகள்”, “கொலை தூரம்” ஆகிய படங்களை இயக்கிய பிரபு இராமானுஜம் இந்தக் “கருப்பட்டி” படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது ஐந்தாவது படமாக இதை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் குறித்து  இயக்குநர் பிரபு ராமானுஜம் பேசும்போது, “அந்தக் கிராமத்தில் கதையின் நாயகனான கருப்பட்டி, தன் தாயுடன் வசித்து வருகிறான்.

அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி, அவளையே திருமணம் செய்து கொள்கிறான்.

மணம் முடித்த சில நாட்களில் பவானி, மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள்.

அவளை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் கருப்பட்டி ஈடுபடுகிறான்.

அப்பொழுதுதான் அவன் பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான்.

அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களில், அவனுக்கு மனைவியின் கொலையாளி யார் என்று தெரிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைகிறான்.

இப்படி ஒரு கதைக் களத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. 

சேலம், மேட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இந்தக் ‘கருப்பட்டி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

Our Score