லியோ விஷன் நிறுவனம் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை, நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri Productions Pvt Ltd) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் டி.கே. இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன், கதையின் நாயகியாக நடிக்கிறார்.
ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் படத் தொகுப்புப் பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார்.
ஃபேண்டஸி வித் டார்க் காமெடி ஜானரிலான இந்தப் படத்தை தயாரிப்பாளர் வி.எஸ்.ராஜ்குமாரின் லியோ விஷன் நிறுவனமும், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri Productions Pvt Ltd) நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இயக்குநர் விக்ரம் கே.குமார் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்தப் பெயரிடப்படாத திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களையும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Leo Vision has officially announced its fifth production, tentatively titled Production No. 5, with actress and producer Nithya Menen joining hands with the production house as co-producer through her banner Keyuri Productions Pvt. Ltd.
Directed by D K, the yet-to-be-titled film features Nithya Menen in the lead role. Acclaimed filmmaker Vikram K. Kumar is on board as the Creative Producer. The film has cinematography by A. Sakthivel and editing by Richard Kevin.
A fantasy dark comedy, the project is jointly produced by Leo Vision, headed by producer V. S. Rajkumar, and Keyuri Productions Pvt. Ltd.
The collaboration among Leo Vision, Keyuri Productions Pvt. Ltd., Nithya Menen, D K and Vikram K. Kumar has already generated anticipation, with the makers promising a distinctive theatrical experience for audiences.
The film is set to be released in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, making it a pan-Indian theatrical release.
Further details about the film, including its official title, additional cast and crew, will be announced soon, the makers have revealed.









