full screen background image

இருமுடி கட்டு – சினிமா விமர்சனம்

இருமுடி கட்டு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்துல தெலுங்கில் இப்போதும் ஒரு பெரிய ஹீரோவாக இருக்கும் ரவி தேஜா ஹீரோவா நடிச்சிருக்காரு. ஹீரோயினா பிரியா பவானி சங்கர் நடிச்சிருக்காங்க.

அப்புறம் அவங்களோடு சாய்குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, விசாலா லக்ஷ்மண் மற்றும் பலரும் நடிச்சிருக்காங்க.

படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பது இயக்குநர் சிவ நிர்வாணா. இந்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிச்சிருக்காங்க.

இதே மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் படம்தான் இந்த வாரம் வந்திருக்கிற ‘மொதோ ராத்திரி’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவை விஷ்ணு சர்மா பண்ணியிருக்காரு. எடிட்டிங் பிரவீன் பூடி செஞ்சிருக்காங்க. கலை இயக்கத்தௌ பார்கவா நௌடோலா அப்படிங்கிறவங்க பண்ணியிருக்காங்க. இந்த படத்துல சண்டை காட்சிகள் அதிகமா இருக்கு. அதுல ராம்-லக்ஷ்மண், ரியல் சதீஷ் இரண்டு பேரும் செஞ்சிருக்காங்க.

இந்தப் படத்தோட கதை, படத்தின் தலைப்பைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

‘இருமுடிக்கட்டு’ அப்படின்னாலே அது சபரிமலை ஐயப்பனை சொல்வதுதான். அவருடைய பக்தியை மையமாக வச்சு எடுக்கப்பட்ட படம். ஆனால் திரைக்கதையில் வேறு பக்கமெல்லாம் போய் படம் சுற்றி வளைந்திருக்கிறது.

ரவி தேஜா ஒரு சின்ன கிராமம். அது தெலுங்கில வேறு ஏதோ ஒரு ஊர். ஆனால் தமிழில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை பக்கத்தில் இருக்கும் சித்தரேவு அப்படின்ற ஒரு ஊரை காட்டுறாங்க.

ஆனால் ஊர் பெயரை மட்டும்தான் இவங்களால சொல்ல முடியும். வசனத்துல டப்பிங்ல காட்ட முடியும். ஆனால் ஷூட்டிங் எடுக்கும்போது எடுத்த அந்த ஆந்திர பிரதேச பஸ், அவங்களுடைய தெலுங்கு எழுத்து… அதையெல்லாம் இவங்களால ஒண்ணுமே செய்ய முடியல. நம்ம மக்கள் அதை சகிச்சிட்டு போயிருவாங்கன்னு அவங்க நினைச்சிட்டாங்க. ரைட் விட்டுருங்க.

தீவிரமான சபரிமலை ஐயப்பனுடைய பக்தரான ரவி தேஜா வருஷத்துக்கு 41 நாள் மட்டும்தான் குடிக்காம இருப்பாரு. மீதி அத்தனை நாளும் குடி, குடி, குடி.

இதுல அவரு ஆட்டோ ஓட்டுறாரு. அவருடைய மகள் மேல அவ்வளவு பாசம். வெறித்தனமான பாசம்.

எந்த அளவுக்கு பாசம்னா, அவருடைய பொண்ணு அஞ்சாம் கிளாஸ் படிக்கிறா. இன்னும் அவளுக்கு 2+2, அதாவது ரெண்டும் ரெண்டும் சேர்ந்தா எவ்வளவுன்னு தெரியலையாம். அதை கேட்டா ஆறுன்னு சொல்றாளாம். இதை தட்டிக் கேட்ட அந்த டீச்சரை என் பொண்ண நீங்க எப்படி திட்டலாம் அப்படின்னு சொல்லி மிரட்டுறாரு.

அப்ப எந்த அளவுக்கு இவரு ஒரு முட்டாள் அப்பாவா இருப்பாருன்னு நினைச்சு பாருங்க.

அதோட அந்த 41 நாள் மட்டும்தான் ஹீரோ குடிக்க மாட்டாரு, அதனால தெளிவா இருப்பாரு.

ஆனா அந்த ஊர்ல ஏதாவது ஒரு பிரச்சனை, அந்த ஊருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை. பெண்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துச்சுன்னா அவ்வளவுதான். அடிதடியில் இறங்கிடுவாரு. துணிஞ்சு இறங்குவாரு, யாருக்கும் பயப்பட மாட்டாரு.

இவருக்கு அந்த ஊர்லயே இருக்கிற ஒரே நண்பர் சாய்குமார், அவர்தான் குருசாமி. அவர் தலைமையில்தான் அந்த ஊர்ல இருக்கிற எல்லாருமே சபரிமலைக்கு போயிட்டு வராங்க.

அந்த ஊருக்கு பக்கத்துல தாமரைக்குளம்னு ஒரு ஊரு. அந்த ஊருக்கும், இவங்களுக்கும் இடையில அப்பப்ப வாய்க்கா தகராறு, சண்டையெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு.

அந்த ஊர் தலைவர் அஜய் கோஷ். அவருடைய மகன் இங்க வந்து ஒரு பொண்ணுகூட வம்பு இழுத்ததால, அந்தப் பையனை போட்டு அடி, அடின்னு அடிச்சு அனுப்பி விட்டுறாரு.

அதே மாதிரி அந்த ஊருக்கு வந்து வேலை பார்க்கிற ஒரு நாலு பேரு அந்த ஊர் பெண்களை சீண்டுறாங்க. அவங்களையும் இவர் போய் தட்டிக் கேட்டு அடிச்சு உதைச்சு எச்சரிக்கை பண்ணிட்டு வராரு.

இந்த நேரத்துல அந்த ஊர்ல கொலைகள் நடக்குது. முதல் கொலை ஒரு பெண். அந்தப் பெண் ஏதோ தற்கொலை பண்ணிக்கிட்டான்ற மாதிரி சொல்லிடுறாங்க.

அதுக்கு அடுத்து அந்த நாலு பேரு கும்பல் ஸ்கூலுக்கு போற சாய்குமாரோட மகளை மிரட்டுறாங்க. 

சாய்குமாரோட பொண்ணோட கிளாஸ் டீச்சரானா சுவாசிகா ரொம்ப கண்டிப்பான டீச்சர். சிரிக்கவே தெரியாத ஒரு டீச்சர். அவ்வளவு கர்ண கொடூரமா மூஞ்சிய வச்சுட்டு பிள்ளைகளை போட்டு அடிக்கிறாங்க.

அவங்களுக்கு ஒரு மோசமான ஒரு பேக்ரவுண்ட் பின்னணியில இருக்கு. அந்த பேக்ரவுண்டை இடைவேளைக்குப் பின்புதான் சொல்கிறார்கள்.

அந்த டீச்சர் சாய்குமாரோட மகளை மிஸ் யூஸ் பண்றாங்க. இது ரவி தேஜாவுக்கு தெரியாது.

சாய்குமாரோட பொண்ணு வந்து ரவி தேஜாவோட பொண்ணுகிட்ட விஷயத்தை சொல்றா. அதை அப்பாட்ட சொல்லணும்னே அப்படி நினைச்சு ஓடும்போது அந்த பொண்ணு கீழ விழுந்து ஏஜ் அட்டென்ட் பண்ணிடுறா. அதனால அப்பாவை பார்க்கக் கூடாதுன்னு சொல்லி வீட்டுல உட்கார வச்சிடுறாங்க. 

நாளைக்கு மறுபடியும் சபரிமலைக்கு மாலை போட போறாரு. இந்த நேரத்துல அவரை கொலை பண்ண பழைய டீம் எல்லாம் ஒட்டுமொத்தமா வந்துடுறாங்க. இது அவருக்கும் தெரிய வருகிறது.

ரவி தேஜா அடுத்து என்ன செய்யப் போறாரு? சபரிமலைக்கு மாலை போட்டாரா? போடலையா? அதுக்கப்புறம் அந்த சாய்குமாரின் மகளுக்கு நடந்து வந்த கொடுமை கொடுமை முடிஞ்சதா இல்லையா? கடைசியா என்ன பண்ணாங்க? ஐயப்பன் வந்து காப்பாத்தினாரா? ரவி தேஜா காப்பாத்தினாரா?

இந்த மாதிரியெல்லாம் கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைச்சிருக்காரு இந்தப் படத்தோட இயக்குநரான சிவா நிர்வாணா.

இது பக்கா தெலுங்கு கமர்சியல் படம்தான். அதுல எந்த மாற்றமும் இல்லை. அதுலயும் ரவி தேஜால்லாம் தெலுங்கு சினிமாவில், கமர்சியல் சினிமாவில் ஊறிப் போன ஒரு நடிகர்.

அவ்வளவு சீக்கிரமெல்லாம் அவரை கமர்சியல்ல இருந்து வெளியே கொண்டு வர முடியாது. அவரும் “நான் கமர்சியல் மெட்டீரியல் மட்டும்தான், அதனால வேற எதுக்கும் என்னை தேடாதீங்க” அப்படின்னுட்டாரு.

இந்த சபரிமலை ஐயப்பன் வேஷத்தை ஏன் போட்டாருன்னா இவரு இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு கேரக்டரில் நடித்ததே இல்லையாம்.

அதுவும் ஐயப்பனை பேஸ் பண்ணி எந்தக் கதையிலும் அவர் அடித்ததில்லை என்பதால் இந்த படத்தில் துணிந்து ஹீரோவாக நடித்திருக்கிறார். 

ஒரு நல்ல ஐயப்பனின் பக்திமான் கதைய சொல்வதாக இருந்தால், அவர் நல்லதொரு மனிதராக இருக்கணும். எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவரா இருக்கணும்.

இவர் குடிக்கிறார்.. குடிக்கிறார்.. குடித்துக் கொண்டே இருக்கிறார். அதுலயும் எப்படி?!

சபரிமலைக்கு போயிட்டு திரும்பி பஸ்ல ஊருக்கு வர்றாங்க. பஸ்ல வந்து இறங்குன உடனே நேரா ஓடி வந்து குடிக்க ஆரம்பிக்கிறாரு. இதுவே தப்பான ஒரு விஷயம்.

சபரிமலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பும்போது நேராக வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். வேறு எங்கேயும் போகக் கூடாது.

அவங்க இருமுடியை கொண்டு வரணும். கொண்டு வந்து வீட்ல இறக்கி வச்சுட்டு, வீட்ல மறுபடியும் சாமி கும்பிட்டுட்டு அதுக்கப்புறம்தான் அவங்க துணியையே மாத்தணும். துணிய மாத்துறவரைக்கும் அவங்க வீட்லதான் இருக்கணும். இதுதான் சம்பிரதாயம்! பூஜை நடைமுறை!

இதையெல்லாம் ஏன் இயக்குனர் கண்டுக்காமல் விட்டாருன்னு தெரியல. சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுறவங்க யார்கிட்ட கேட்டாலும் தெளிவா சொல்லிடுவாங்க இந்த விஷயத்தை.

அதுக்குன்னு சில ஐதீகங்கள்லாம் இருக்கு. அதை சட்டுனு அங்கேயே விட்டுட்டு வர முடியாது.

சபரிமலைல ஐயப்பனை கும்பிட்டுட்டு, இருமுடியை விட்டுட்டு, உடனே அங்கேயே தண்ணி அடிக்கிறாங்கன்ற மாதிரியெல்லாம் ஒரு வசனம்லாம் வச்சிருக்காங்க.

எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வசனம். நிச்சயமா கண்டிக்கத்தக்க ஒரு வசனம். இதை இயக்குநர் ஏன் இதை அனுமதித்தாருன்னு தெரியல.

பக்தின்னு ஒண்ணு வந்துட்டா அதுல 100% கரெக்டா இருக்கணும். இதில் நம்பிக்கை இல்லாத மாதிரியெல்லாம் பேசக் கூடாது.

அதோட ஹீரோ ரவி தேஜாவை குடிகாரனா காட்டுனது எதுக்குன்னு தெரியல. இவ்வளவு அதிகமான குடிகாரர்… இவ்வளவு அதிகமா சண்டை போட முடியுமா? அதுவும் குடிச்ச நிலைமையில?

மகள் மேல பாசமா இருக்குறவரு “குடிப்பது கெட்ட பழக்கம். அதை செய்யக் கூடாதுன்னுதானே மகள்கிட்ட சொல்லணும்?

இவரு பிள்ளைகிட்டயே மதுவை வாங்கிக் குடிக்கிறார். அந்தப் பிள்ளையே பாட்டிலை எடுத்துக் கொடுக்குது. 

இதெல்லாம் முட்டாள்தனமான, அநாகரிகமான ஒரு காட்சி. வைத்திருக்கவே கூடாது. குழந்தைகளை வச்சு இந்த மாதிரி செய்யலாமா?!

எங்கேயுமே ஏத்துக்க முடியாத ஒரு திரைக்கதை. இயக்குநர் செஞ்சது மிகப் பெரிய தப்பு. குழந்தைகளை இந்த மாதிரி ஒரு விஷயத்துல இன்க்ளூட் பண்ணவே கூடாது.

இவர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்னா பொங்கி பொங்குவாராம். ஆனா வீட்டிலேயே அவரு பண்றதே மிகப் பெரிய தவறு, மிகப் பெரிய கொடுமை. குழந்தைகிட்ட அந்த ட்ரிங்க்ஸ் அப்படிங்கிற பாட்டிலையே கண்ணுல காட்டக் கூடாது. அதானே கரெக்ட்? அதான் நியாயமானது.

இதை விட்டுட்டு, “நீயே போய் எடுத்துட்டு வாம்மா. நான் குடிச்சா குடிச்ச மாதிரி வாடை வருதா?” அப்படிலாம் சிறுமிகளிடம் கேட்கிறது எல்லாம் முட்டாள்தனம்.  முட்டாள்தனமான ஸ்கிரீன் பிளே இது, இந்தப் படத்துல இருக்கு.

அப்புறம் சில வசனங்கள் எல்லாம் ரொம்ப ஓவர். பாதி வசனங்கள் இந்த குடி சம்பந்தப்பட்ட வசனங்கள் எல்லாம் தப்பான வசனங்கள். அதுவும் அந்தப் பெண்ணும் அந்த அப்பாவும் பேசுற பேச்சு நிச்சயமாக ஏத்துக்கவே முடியாது, இதைப் பார்த்தா மட்டும்.

அதுக்கப்புறம் அதே மாதிரி இந்த பெண்களை கொடுமைப்படுத்துவதெல்லாம் இவ்வளவு தூரம் காட்டணுமான்னு அவசியமே கிடையாது.

இப்படி காட்டுறதால என்ன ஆயிடும்? பாக்குறவங்களுக்கு அது ரொம்ப டிஸ்டர்பன்ஸா கொடுக்கும். பெண்களுக்கே ரொம்ப டிஸ்டர்பன்ஸா கொடுக்கும்.

யாராவது ஒரு ஆண் சும்மா தற்செயலா பார்த்தாகூட அவன் நம்மள கர்ண கொடூரமா பார்க்கிறான்னு நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஒரு தவறான ஒரு விஷயத்தை கொண்டு போறாங்க.

கிட்டத்தட்ட பத்து வருஷமாத்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குற்றவாளிகளை அடையாளம் காட்டுறேன்னு சொல்லி, அந்த குற்றத்தையும் விஸ்தாரமா பண்ணி…. இப்ப புதுசா வர்ற ஜெனரேஷனுக்கு அதை செய்யறது தப்பில்லைன்ற மாதிரி ஏத்திவிட்டுடாங்க.

ரொம்ப, ரொம்ப தப்பான ஒரு கதை, திரைக்கதையில இந்தப் படத்தை எடுத்திருக்காரு இயக்குநர். வன்மையாக கண்டிக்கிறோம். வேற வழியில்லை. நம்மளாவது கண்டிச்சுதான் ஆகணும், அதனால கண்டிக்கிறோம்.

நடிப்பு அப்படின்னு பார்த்தால் அதெல்லாம் சிறப்புதான். அந்தந்த கேரக்டர் ஸ்கெட்ச்க்கு ஏத்தாப்புல அவங்க, அவங்க சிறப்பா நடிச்சிருக்காங்க.

ரவி தேஜாவும், பிரியா பவானி சங்கரும் போட்டி போட்டுத்தான் நடிச்சிருக்காங்க. இல்லைன்னு சொல்லல.

பிரியா பவானி சங்கர் தமிழ்ல கொஞ்சம் விட்டுட்டு தெலுங்குல ஒரு மார்க்கெட்டை பிடிக்கலாம்னு சொல்லிட்டு அந்தப் பக்கம் போயிட்டாங்க போல இருக்கு.

இப்போ தமிழில் ரெண்டே ரெண்டு படங்கள்தான் அவங்க கையில இருக்கு. ‘டிமாண்டி காலனி’ இன்னொரு படம் மட்டும்தான் வச்சிருக்காங்க. வேற தமிழ் படத்துல நடிக்கல.

தெலுங்குல தமிழை விடவும் சம்பளம் உயர்வு கிடைத்திருக்கலாம்.

இவங்கள அடுத்து சாய்குமார். அவரு கொஞ்சம் சிறப்பா ஒரு குணச்சித்திர நடிகரா நடிக்கிறாரு. கடைசி கிளைமாக்ஸ்ல அவருக்கு வரும் அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் எதிர்பாராதது.

அதுல வில்லனா நடிச்சிருக்கும் அந்த எம்எல்ஏ, சுவாசிகா இருவரும் பிரமாதமா நடிச்சிருக்காங்க. சுவாசிகாவுக்கு அந்த வில்லி கதாபாத்திரம்

ஆனா இப்படி ஒரு கேரக்டரில் இனிமேல் நடிக்காதீர்கள் அப்படின்னு நாள சொல்ற அளவுக்கு அந்த கேரக்டர்ல பயமுறுத்தி இருக்காங்க அவங்க.

அப்புறம் அந்தப் படத்துல ரவி தேஜாவோட மகளா நடிச்ச அந்தபீ பொண்ணு நக்ஷத்ரா. ரொம்ப அழகா நடிச்சிருக்கு. அந்தப் பொண்ணோட க்யூட்டான அந்த வசனம் பேசுறது எல்லாம் ரொம்ப அழகா இருக்கு.

அப்புறம் சாய்குமாரோட பொண்ணா நடிச்சவங்க.. அவரோட ஃப்ரண்ட்ஸா நடிச்சவங்க எல்லாருமே ரொம்ப சிறப்பா நடிக்க வைக்கப்பட்டிருக்காங்க.

இதுலயும் கேமரா ஒர்க் பிரமாதம்தான். ஒரு பெரிய பட்ஜெட் படம் பிடிக்கிறதுனால ஓரளவுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அழகா காட்டியிருக்காங்க.

அதுல இரவு நேர காட்சிகளும் அழகு. அதுவும் அழகு, இந்த டேம் எல்லாம் எங்க போய் பிடிச்சாங்கன்னு தெரியல. அந்த டேம்ல அழகா உட்கார்ந்துட்டு பேசுற அந்த சீன்லாம் ரொம்ப அழகா ஷூட் பண்ணி இருக்காங்க.

அப்புறம் மியூசிக் போட்டு தாளிச்சிருக்காரு நம்ம ஜி.வி. பிரகாஷ். பின்னணி இசையை விட்டுருங்க. அந்தக் கல்யாண பாட்டுக்கு இசையை ரொம்ப நல்லா போட்டு இருக்காங்க.

ஒரு பக்தி பாடல்கள், இரண்டு பாடல்களுமே ரொம்ப கேட்கக் கூடிய அளவுக்கு ரொம்ப அழகான பாடல்கள்.

கண்டிப்பா இந்த பக்தி பாடல்கள் இரண்டுமே ஐயப்ப பக்தி பஜனை பாடல் கேசட்டில் இசையாக இடம் பெறும் அப்படின்னு உறுதியா நம்புறோம். ஜிவிக்கு இதுக்காகவே நம்முடைய பாராட்டுக்கள்.

சண்டை பயிற்சியாளர் ரொம்ப அற்புதமா கடினமா உழைச்சிருக்காங்க அப்படின்னு நல்லா தெரியுது. அந்த உழைப்பை அழகாக தொகுத்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர். அதனாலதான் நமக்கும் அந்த சண்டைக் காட்சிகள் எப்பவும் பிரமாதமா இருக்கும்.

ஒரு அதிரடி கமர்சியல் படம். அதோடு பிள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கக் கூடாது அப்படின்னு சொல்லணும். ஆனா இதுல நடந்துருச்சு,

அதை பழி வாங்குறார் அப்படிங்கற மாதிரியே போனா இன்னும் எத்தனை படத்துக்குத்தான் இப்படியே சொல்லிட்டே போவாங்க?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்குதுன்னா நடக்காமல் தடுப்பதற்கு என்ன செய்யணுமோ அதை செய்யணும்.

ஆனா இதுல செஞ்சா நான் அவனை அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கொலை செய்வேன்… அப்படின்னு ஒரு ஹீரோயிசம் படமா இதை மாத்தி என்ன சொல்ல வந்தாரோ அதை நிறுத்திட்டாங்க அந்த டைரக்டர். அவருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.

அதோட இன்னொரு மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக், படத்துல இவ்வளவு கொலை நடக்குது, இவ்வளவு அடிதடி நடக்குது, ஊர்ல ஒரு போலீஸைக்கூட காட்டலங்க. ஒரு போலீஸைக்கூட இல்லாத ஊர்ல போல இருக்கு.

நிலக்கோட்டையிலும் போலீஸ் இருக்கு. சித்தரேவுலயும் போலீஸ் ஸ்டேஷனே இருக்கு இப்போ. திண்டுக்கல்லயே கார்ப்பரேஷன் ஆகி கமிஷனரேட் அளவுக்கே போலீஸ் இருக்காங்க. ஒரு போலீஸ் கூடவா இல்ல ஊருக்குள்ள? ஒருத்தர் கூட வரல, ஒரு சீன்ல கூட வரல.

அதுலயும் மிகப் பெரிய டிராஜெடி, அந்தப் பொண்ணு செத்த பின்னாடி கொண்டு வந்து அப்படியே கூட்டிட்டு வந்து, தூக்கிட்டு வந்து வீட்ல போடுறாங்க. அது மர்ம மரணம். கண்டிப்பா போலீஸ் கேஸ்தான் ஆகணும்.

அப்படியே தூக்கிட்டு வந்து வீட்ல வச்சுட்டு அப்படியே எரிச்சிடுறாங்க. என்னய்யா கொடுமையா இருக்கு! இது எந்த ஊர்ல நடக்குது? ஆந்திராவுல வேணா நடக்கலாம். ஆனால், இங்க தமிழ்நாட்டுல இது நடக்குமா?

ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்கோட இந்தப் படம் வந்திருந்தாலும் இது ஒரு பக்காவான தெலுங்கு கமர்சியல் படம்தான். பார்க்க விரும்புறவங்க பாருங்க.

RATING : 3 / 5

 

Our Score