தமிழ் ‘ஜீ 5’ (Tamil ZEE5) ஓடிடி தளம், புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நேரலை விளையாட்டுப் போட்டிகள் அடங்கிய தனது பிரம்மாண்ட புதிய வெளியீட்டுப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிந்தைய முதல் திரைப்படமும், அவரது கடைசித் திரைப்படமுமான ‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஜீ 5.
அதனுடன் நயன்தாரா-கவின் நடிக்கும் ‘ஹாய்’ (Hi), அருண்நிதி-பிரியா பவானி சங்கரின் ‘டிமான்டி காலனி’ (Demonte Colony), கீர்த்தி சுரேஷின் ‘சாவித்திரி’, ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’ மற்றும் அக்ஷய் குமார்-பாசில் ஜோசப் நடிக்கும் ‘ராவடி’ ஆகிய திரைப்படங்களையும் திரையிடவுள்ளது.
மேலும் ‘விலங்கு 2’, ‘கூஸ் முனிசாமி வீரப்பன் 2’, ‘ரேகை 2’, ‘தடயம் 2’, ‘சட்டமும் 2’ போன்ற வெற்றித் தொடர்களின் அடுத்த பாகங்களும் வெளியாகவுள்ளது.
நெல்சன் இயக்கும் ‘Mix FM’, ஆனந்த் நீலகண்டனின் ‘அனந்த காலம்’, ‘ஆக்டோபஸ்’, ‘தாய் மண்’ போன்ற புதிய ஒரிஜினல் தொடர்களையும், ‘தீக்குறள்’ என்ற புதிய ரியாலிட்டி ஷோவையும் கொண்டு வரவுள்ளது.
இதோடு ‘கருடன்’, ‘விக்ரம் வேதாள்’, ‘சிவ சதி’ உள்ளிட்ட ஏஐ (AI) தொழில் நுட்பக் கதைகளும், ஃபிஃபா (FIFA), புண்டெஸ்லிகா (Bundesliga), இத்தாலிய கோப்பை மற்றும் ILT20 போன்ற நேரலை விளையாட்டுப் போட்டிகளும் ஜீ 5 தளத்தில் இந்தாண்டு வெளியாகவுள்ளன.









