full screen background image

‘ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே!’ – கருத்தைச் சொல்ல வரும் ‘பகையறு’ திரைப்படம்!

‘ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே!’ – கருத்தைச் சொல்ல வரும் ‘பகையறு’ திரைப்படம்!

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘பகையறு!’

இந்தப் படத்திற்கு இசையமைத்து, பாடல்கள் எழுதி படத்தையும் தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் சதா.முருகன்.

இந்தப் படத்தில் யாசர், திவ்யா கிருஷ்ணன், ரஞ்சன் மணிமாறன், ‘ஹலோ’ கந்தசாமி புவனா, நேத்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜ்குமார், படத் தொகுப்பு சி.ஆர்.புவனேஷ், சண்டை இயக்கம் – அசால்ட் மதுர, பின்னணி இசை – பாஸில், எழுத்து, இயக்கம் – சே.ரா.ராஜேஷ்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் செ.ரா.ராஜேஷ் பேசும்போது, “இந்தப் படம் ஒரு சமூகம் சார்ந்த முக்கிய கருத்தைச் சொல்லும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பெண்ணானவள் இம்மண்ணிலே மதிக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் நம் பழமொழி கூறுவது போல… “இந்த உலகம் ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே” என்ற கருத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

Our Score