full screen background image

‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது!

‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது!

பார்வையாளர்களை இறுதிவரை சஸ்பென்ஸில் வைக்கும் கிளாசிக்கல், மர்டர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் ‘மாறுவேஷம்’.

வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

இந்த ‘மாறுவேஷம்’ படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் ஸ்ரீனி எழுதி, இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக வியானா நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் வைபவ், ‘திலக்’ என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மர்மமான கொலை வழக்கு ஒன்றின் உண்மையை அவர் கண்டறிய முயலும்போது, அதில் மறைக்கப்பட்ட அடையாளங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் ஆகியவற்றை இப்படம் பேசுகிறது.

சஸ்பென்ஸ், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் விசாரணை, திரில்லர் ஆகியவற்றை கொண்ட விறுவிறுப்பான கதையாக நகரும்.

மிஸ்ட்ரி ஜானர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘மாறுவேஷம்’ மறக்க முடியாத திரை அனுபவத்தை வழங்கும் என படக் குழு தெரிவித்துள்ளது.

இதன் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்துக்கு சென்சாரில் தற்போது ‘யூ/ஏ’ சான்றிதழும் கிடைத்துள்ளது.

இதையடுத்து இந்த ‘மாறுவேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

தொழில் நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: பாலாஜி கே. ராஜா,
இசை: ராஜ்குமார் அமல்,
படத்தொகுப்பு: என்.பி. ஸ்ரீகாந்த்,
கலை இயக்கம்: மணிகண்டன் ஸ்ரீனிவாசன்,
கூடுதல் திரைக்கதை: எஸ். இசையமுதன்.

Our Score