‘மாயக்காளான் 🍄’ என்ற படத்தை
இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார் நடிகர் கொட்டாச்சி!
பல படங்களுக்கு பைனான்ஸ் செய்த ராஜேஸ்வரி பைனான்ஸ் நிறுவனத்தின் சுரேஷ் ஜி.முத்துக்குமார் முதல்முறையாக இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் கொட்டாச்சியுடன், பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனான கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, ‘காதல்’ சுகுமார், K.C.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – சந்தோஷ், ஒளிப்பதிவு – ஆசிப், எடிட்டிங் – லோகேஷ், பத்திரிக்கை தொடர்பு – கோவிந்தராஜ்.
தற்போது இந்த ‘மாயக் காளான்’ படம் குமுளி பகுதியில் வேகமாக உருவாகி வருகிறது.
Our Score









