full screen background image

‘ஜூமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

‘ஜூமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஜே.பி.சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் ‘ஜுமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கும் ‘ஜுமாக்கா’ படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார்.

பழமையான கேமாராவை கதைக் களமாக கொண்டு ஜே.பி.சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் சென்னையில் நிறைவு பெற்றது.

இப்படம் முழுக்க, முழுக்க பிரம்மாண்ட செட் அமைத்து அதில் முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், ஜெயக்குமார் மற்றும் வினோத் முன்னா போன்ற பெரிய காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.

‘ஜுமாக்கா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரும், இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.  

இப்படத்தின் சில காட்சிகளை பார்த்த விஜய் ஆண்டனி இயக்குநர் அசோக் ராமையும், தயாரிப்பாளர் ஜெயக்குமாரையும் வெகுவாக பாராட்டினார்.

Our Score