full screen background image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வான வேடிக்கை’ படம் துவங்கியது!

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் ‘வான வேடிக்கை’ படம் துவங்கியது!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிப்பில் ஒன்பதாவது படமான ‘வாண வேடிக்கை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜையில் பிரேமதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய,
தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்MP அவர்கள் மனைவியார் பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.

இப்படத்தை ‘நான் சிகப்பு மனிதன்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் திரு இயக்குகிறார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குநர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குநர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு அர்.வி. ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கலை இயக்கம் ராஜ்கமல், படத் தொகுப்பு – பிரேம்குமார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற உள்ளது.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் திரு கூறுகையில்..

“இதுவரை நீங்கள் பார்த்திடாத சண்முக பாண்டியன் விஜயகாந்தை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்..

இப்படம் தந்தைக்கும், மகனுக்குமான உணர்வை சொல்லும் ஒரு அழகிய கமர்சியல் படம். படத்தைப் பற்றிய மற்ற அறிவிப்புகளை படபிடிப்பு முடிந்தவுடன் அறிவிக்கிறோம்” என்றார்.

Our Score