full screen background image

லவ் ஓ லவ் – சினிமா விமர்சனம்

லவ் ஓ லவ் – சினிமா விமர்சனம்

Love Oh Love Cast and Crew details

KS Ravikumar as Rajendra

Selvaraghavan as Inspector Harichandran

Vanitha as Lekha

Pavish as Raghuvaran

Nagadurga as Avanthika

Ramya as Raadhika (Heroine Mother)

Soundarya as Shanthi

Kathir as Maaran

Ashwath as Tatoo

Movie Credits :

Written and Directed by Magesh Rajendran

Produced by Zinema Media and Entertainment Ltd & Creative Entertainers and Distribution

Producers : Dinesh Raj, G Dhananjheyan

Starring : Pavish Narayan, Naga Durga, Selvaraghavan, K.S. Ravikumar, Vanitha Vijayakumar, Ramya, Ashwath, Soundarya, Adithya Kathir and others

Finance Controller : Lalithaa Valasamuthu

Music : Foxn

Director of Photography : P.G. Muthiah

Editor : N.B. Srikanth 

Art Director : Pa. Mahendran

Stunts : Abishek Srinivas

Costume Designer : Harshika Ramesh

Story Discussion : S. Devaraj, Rajesh Sundaramoorthy, Jaisee, Jayaprakash Ilamparathi, Gomathiramalingam, Velmurugan Subramani, Jasmine, Harish B

Co-Directors : Mutharasan Shanmugam, Suriya Thavamani Pandian

Associate Directors : V. Ramachandar, N. Yuvaraj, S.K. Vikram, Vimal, Santhosh Balaji

Dubbing : K. Jagan – Le Magic Lantern Studio

VFX : D NOTE – Murthy

DI : Vels – D Studio

Colorist : KS. Rajasekaran D.F. Tech

Mixing : S.P. Narayanan

Sound Design : Shreyas Bhat

Publicity Designer : Sathish TP

Production Executive : Rajesh Kanna

Production Manager : Saravana Kumar. V

Accounts : K Chellan

Stills : Mahesh Jayachandran

PRO : Rekha

Promotions : N S Jegadeesan (DIGITALLY) 

படத்தின் தலைப்பு போலவே இதுவும் காதலை மையப்படுத்திய  படம்தான். எத்தனையோ வகையான காதல்களை இதுவரையில் தமிழ் சினிமா உலகம் கண்டிக்கிறது. அந்த கண்டுபிடிப்பு வரிசையில் புதிதாக சேர்ந்து இருக்கிறது இந்தப் படம்.

ஹீரோ பவிஷ் இப்போது ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மாதச் சம்பளமாக 40 ஆயிரம் ரூபாய் பெறுகிறார். இந்தச் சம்பளத்தில் தன்னுடைய அப்பா, அம்மா, தங்கை என்ற மூன்று பேருடன் இருக்கிறார். அவருடைய அப்பா கே.எஸ்.ரவிக்குமார் பொறுப்பான ஒரு தந்தையாக இருக்கிறார். மகனுக்கு எந்த ஒரு தொல்லையும் கொடுக்கக் கூடாது என்று உறுதியாக இருப்பவர்.

பவிஷ் தான் வாங்கும் சம்பளத்தை அப்படியே வீட்டில் கொடுத்துவிட்டு ஒரு டூவீலர்கூட இல்லாமல்.. தேவை என்றால் அப்பா வீட்டில் பயன்படுத்திவரும் டூ வீலரைப் பயன்படுத்தும் அளவுக்கு சிக்கனக்காரர்.

இந்த நேரத்தில்தான் பவிஷூக்கு காதல் வந்து தொலைகிறது. காதலி நாக துர்கா பவிஷின் காதலை ஏற்றுக் கொள்வதோடு காதல் விளையாட்டையும் ஆரம்பிக்கிறார்.

அந்த காதல் தொடங்கிய நாளிலிருந்து அதுவரையிலும் சிக்கனமாக வாழ்ந்து வந்த பவிஷ்.. காதல் வந்து தொலைத்த பிறகு பெரும் செலவாளியாக மாறுகிறார். இவருக்கு செலவுகளை இழுத்து வைப்பதே அவருடைய காதலி நாக துர்காதான். பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மிகப் பெரிய பர்ச்சேஸ்கள் என்று தினமும் தன் காதலிக்காக பணத்தை தண்ணியாக செலவழிக்கிறார் பவிஷ்.

மாதச் சம்பளம் சீக்கிரமாக கரைந்துவிடுவதால் கிரெடிட் கார்டுகளை வாங்குகிறார் பவிஷ். அது மூலமாகவும் செலவுகளை செய்கிறார் பவிஷ். காதலியின் நச்சரிப்பு தாங்காமல் டூ வீலர் வாங்குகிறார். அதற்கான இன்ஸ்டால்மெண்டும் அவரை துரத்துகிறது. இந்த நேரத்தில் இந்த காதல் விஷயம் அறிந்த நாக துர்காவின் அம்மா பவிஷின் குடும்பத்தாரை போலீஸ் ஸ்டேஷன்வரை வரவழைத்து விடுகிறார்.

திடீர் திருப்பமாக போலீஸ் ஸ்டேஷனில் நாகதுர்கா தன்னுடைய அம்மாவுடன் செல்வதாக சொல்லிவிட்டு காதலுக்கு குட் பை சொல்லிவிட்டுப் போகிறார்.

இதுவரையில் தான் பட்ட அவஸ்தைகள்.. காதலிக்காக வாரி இறைத்த பணத்தினால் ஏற்பட்ட பிரச்சனைகள்.. கிரெடிட் கார்டு லோன் கட்ட முடியாமல் தவிப்பது.. டூவீலருக்கான இன்ஸ்ஸ்டால்மென்ட்டை கொடுக்க முடியாமல் அல்லல்படுவது என்று அனைத்து வித துன்பங்களையும் நேருக்கு நேர் சந்தித்துவிட்ட பவிஷ். இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறார்.

காதலியிடம் இருந்து பிரியலாம் என்று நினைக்கிறார் பவிஷ். ஆனால் மீண்டும் ஒரு பெரிய திருப்பமாக காதலி நாகதுர்கா பவிஷை நேரில் சந்தித்து, தான் இன்னமும் அவனைக் காதலிப்பதாக சொல்லி அடம் பிடிக்கிறார்.

இப்பொழுது பவிஷ் அவருக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். “அடுத்து நான்கு மாதங்கள் மட்டும் நீ காதலனாகவும் நான் காதலியாகவும் இருக்கிறேன். என் நிலைமையில் இருந்து நீ வாழ்ந்து பார். அப்போதுதான் என்னுடைய கஷ்டம் உனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

இதை நாக துர்காவும் ஏற்றுக் கொள்ள இப்போது காதலன் காதலியாகவும் காதலி காதலனாகவும் மாற அடுத்து என்ன நடக்கிறது என்கின்ற சுவாரஸ்யம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் பவிஷ், நடிகர் தனுஷின் சொந்த அக்காள் மகன். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருந்தார். இது இவருடைய இரண்டாவது படம்.

இந்தப் படத்தில் ஹெவி டியூட்டியாக இவர் தலையில் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார் இயக்குநர். ஒரு பக்கம் காதலி.. இன்னொரு பக்கம் குடும்பம் என்று இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிலையில் பவிஷின் நடிப்பு சில காட்சிகளில் மிக சரியாகத்தான் இருக்கிறது.

இன்னொரு பக்கம் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கின்ற அந்த அல்லல்பாட்டையும் மிக அழகாக தன்னுடைய நடிப்பில் காண்பித்து இருக்கிறார். நடிப்பு மட்டுமல்ல நடனத்திலும் நான் மிகச் சிறப்பானவன் என்பதை காட்டும்வகையில் இரண்டு அட்டகாசமான குத்துப் பாடல்களுக்கு அழகாக நடனம் மாறி இருக்கிறார் பவிஷ்.

தன்னுடைய அப்பா, அம்மாவை போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் இழுத்து வந்துவிட்ட கோபத்தை அவர் காட்டும்போது.. “நல்லது தம்பி இப்படியே பிச்சுட்டு போயிரு என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.

ஹீரோயினாக நடித்திருக்கும் நாக துர்கா அப்படி ஒன்றும் அழகியல்ல. ஆனால் கேமராவுக்கு ஏற்ற முகமாக அமைந்திருக்கிறார். இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் படம் சொல்ல வரும் கருத்தை தன்னுடைய கதாபாத்திரம் மூலமாக அழுத்தமாக பேசி இருக்கிறார். நடித்தும் இருக்கிறார். நடன காட்சிகளில் சிறப்பாக ஆடியிருந்தாலும் இன்னும் சில இயக்குநர்களிடம் இவர் நடித்த பின்பு பெரிதாக வலம் வரக் கூடும்.

பவிஷின அப்பாவாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் தனது பண்பட்ட நடிப்பினை காண்பித்திருக்கிறார். தன்னுடைய மகன் தன்னை மட்டுமல்ல. தன் குடும்பத்தையும் மொத்தமாக ஏமாற்றி வைத்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன் மகனை விட்டு பிரியும் அந்த சூழலில் அவர் எடுக்கின்ற முடிவு சரிதான் என்றாலும் அதற்கான காரணங்களை தன்னுடைய இயல்பான நடிப்பினால் சொல்லி இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன்தான் இந்தப் படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார். இவரிடம் பவிஷ் தன் காதல் கதையைச் சொல்லும்விதமாகத்தான் படமே துவங்குகிறது. நகர்கிறது. அதிலும் முன், பின்னான காட்சிகளில்கூட சொல்வது சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.

செல்வராகவன் வெறுமனே சீட்டில் அமர்ந்து கொண்டு பேசியிருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பு நம்மை கவரவில்லை. ஆனால் கதையை நகர்த்துகிறார் என்பதால் கவனிக்க வைத்திருக்கிறார்.

பெண்ணுரிமை சங்க நிர்வாகியாக நடித்திருக்கும் வனிதா, போலீஸ் ஸ்டேஷனில் வந்து பிரச்சனை செய்து உண்மை என்ன என்பதை தெரியாமலேயே கொதிக்கின்ற காமெடிக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.

ஹீரோயினின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா, மாறன், அஸ்வத், சௌந்தர்யா என்று படத்தில் நடித்திருக்கும் பிறரும் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தால் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் போடப்பட்டிருக்கும் செட்டுகளைக்கூட அழகாக பதிவு செய்திருக்கிறார். ஹீரோவாக வந்தாகிவிட்டது என்பதால் ஏதோ ஒரு சண்டைக் காட்சி வைத்தாக வேண்டுமே என்பதற்காக ஒரு சண்டைக் காட்சியை வைத்து அதை டெக்னிக்கிலாக ரசிக்க வைத்திருக்கிறார் பி.ஜி.முத்தையா.

இசையமைப்பாளர் பாக்னின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துவிட்டன. மெட்டுக்கள் இனிமையாக இருக்க பாடல் வரிகள் புரியும்வகையில் எளிதாக இருக்க.. நடனமும், கேமராவும் சிறப்பாக இருக்க ஆடலும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

முன் பின் காட்சிகளாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், எந்தக் குழப்பமும் வராத அளவுக்கு கவனமாக தொகுத்து அளித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.

கேரக்டர் ஸ்கெட்ச்படி செல்வராகவனின் கேரக்டரே காமெடியானது. இப்படி ஒரு இன்ஸ்பெக்டர் எந்த ஸ்டேஷனில் இருப்பார் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு செல்வராகவன் கேரக்டரி ஸ்கெட்ச் காமெடியாகவே அமைந்துள்ளது.

காதலுக்காக தன் உயிரை விடும் காதலர்களும், காதலனுக்காக எதையும் இழக்க தயாராகும் காதலிகளும் சமூகத்தில் உண்டு. ஆனால் காதலிக்காக காதலன் தன்னுடைய வாழ்க்கையை பணயம் வைத்து கடனாளியாகும் அந்த சப்ஜெக்ட், தமிழ் சினிமாவுக்கு புதுசுதான். அதை மையமாக வைத்து இந்தக் காலத்திய இளைஞர்களை குறி வைத்து தாக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.

காதல் எப்படி தோன்றியது என்பதைவிட அந்தக் காதல் எப்படி மென்மேலும் வளர்ந்து இறுதியில் திருமணத்தில் வந்து முடிகிறது என்பதில்தான் அதற்கான பெயரும் சிறப்பும் இருக்கிறது. ஆனால், இந்தக் காலத்தில் இளைஞர்கள் அதைப் பற்றி யோசிக்காமல் குடும்பத்தின் பொருளாதார நிலைமையையும், குடும்பத்தின் பெருமையையும் நினைத்து காதலை கைவிடுகிறார்கள் அல்லது தொடர்கிறார்கள்.

எதற்காக இந்தக் காதல் என்ற கேள்வியை காதலர்கள் இருவருமே ஒரு நாளும் பேசியிருக்க மாட்டார்கள். அதுதான் இப்போது இளைஞர்களிடத்தில் நிலவும் மிகப் பெரிய பிரச்சனை. இதைத்தான்  இயக்குநர் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார்.

ஆனால், அதைச் சொல்லும் வகையை வசனங்கள் மூலமாக சொல்லாமல் விட்டிருப்பதால்.. இரண்டு முட்டாள்கள் காதலிக்கிறார்கள்.. பின்பு அதை வளர்க்கத் தெரியாமல் கூமுட்டைத்தானமாக செய்து கடைசியில் அவர்களே குழம்பிப் போய் புலம்பித் தள்ளுகிறார்கள் என்பதாகக் கொண்டுவந்துவிட்டார் இயக்குநர்.

இந்தப் படத்தை காதலர்கள் மட்டுமல்ல.. அவர்களின் குடும்பத்தாரும் சேர்ந்து பார்க்கலாம்.

RATING : 3.5 / 5

Our Score