AZ06 production பட நிறுவனம் சார்பில் S.M.முகம்மது அசாருதீன் தயாரித்து, இயக்கி வரும் திரைப்படம் ‘அலப்பற கிளப்புறோம்.’
இவர் ஏற்கனவே ‘ஹாப்பி பர்த்டே’, ‘லூசி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக விக்ரம் சுந்தர், நரேஷ், சஞ்சீவ் சீனிவாஸ், ஹரி விஜய், கிரிதர், ஹரிஷ், கைலாஷ் மற்றும் SK குரு ஆகியோர் நடித்துள்ளனர்
கதாநாயகியாக ஜனனி, சிவரஞ்சனி, அனு பிரியங்கா, சுமியா, மாலினி தனா, சுகன்யா, நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர்.
மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவி புகழ் சங்கர பாண்டியன், ‘கஞ்சா பூ கண்ணாலே’ பாடல் மூலம் பிரபலமான பாடல் ஆசிரியர் மணிமாறன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மிகப் பெரிய பொருள் செலவில் சென்னை மற்றும் தேனி மாவட்டத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
காதல், காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இந்த ‘அலப்பறை கிளப்புறோம்’ படம் அமைந்துள்ளது.
மோனிஷ் மற்றும் ஹய்டு கார்த்திக் இசையமைத்துள்ளனர். ஐயப்பன் மற்றும் பாலகுரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறும்.









