ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான தினேஷ்ராஜ் தயாரிப்பில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா நடிக்கும் படம் ‘அட்டாக்கர்’.
அறிமுக இயக்குநரான தாமோ நாகபூஷனம் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம், இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பட பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே துவங்கியது.
ஜினிமா மீடியா எண்டர்டெய்ண்மெண்ட் சேர்மன் தினேஷ்ராஜ் மற்றும் பா.இரஞ்சித் இருவரும் கிளாப் அடித்து படத்தைத் துவங்கி வைத்தனர்.
பவிஷ், மற்றும் மைம் கோபி இருவரும் நடிக்கும் முதல் காட்சியை தனது இணை இயக்குநருக்காக ஆக்சன் சொல்லி துவக்கி வைத்தார் பா.இரஞ்சித்.
வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.









