full screen background image

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – சக்தி வாய்ந்த ஆக்ஷன் குடும்ப திரைப்படம்!

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – சக்தி வாய்ந்த ஆக்ஷன் குடும்ப திரைப்படம்!

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.

உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் (Post Production) முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.

படத்தில் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, இசை அருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் குழு:

கதை & இயக்கம் – மு. மாறன்
இசை – விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு – ராஜீவ் ராஜேந்திரன்
எடிட்டிங் – விஜய் ஆண்டனி
தயாரிப்பு வடிவமைப்பு – A. ராஜா
உடை வடிவமைப்பு – G. அனுஷா மீனாட்சி
சண்டைக் காட்சிகள் – ராஜசேகர்
ஒலி வடிவமைப்பு – ரஹமதுல்லாஹ்
பத்திரிக்கை தொடர்பு – ரேகா

VIJAY ANTONY’S “APPA KUTTY” PROMISES A POWERFUL ACTION FAMILY DRAMA EXPERIENCE; POST-PRODUCTION WORK IN FULL SWING

Actor, composer, editor, and filmmaker Vijay Antony is gearing up to present audiences with yet another emotionally rich and content-driven film through his upcoming project titled “Appa Kutty.” Directed by Mu. Maran, the film is positioned as an action family drama that beautifully blends emotions, relationships, and intense moments while exploring the deeply rooted bond between a father and daughter.

Known for delivering stories that are emotionally engaging and socially relatable, director Mu. Maran has crafted “Appa Kutty” as a gripping entertainer packed with action, emotions, family sentiments, and powerful dramatic moments that will resonate strongly with audiences. The film is expected to strike a strong emotional chord while also offering thrilling and engaging cinematic moments throughout its narrative.

The shoot of “Appa Kutty” has now been successfully completed, and the team is currently busy with the post-production process, which is progressing rapidly in full swing. The makers are planning for a grand theatrical release in August, aiming to offer audiences a refreshing action-packed emotional entertainer and a wholesome cinematic experience.

Vijay Antony, who has consistently balanced commercial success with meaningful storytelling, will be seen in a role that is expected to showcase both emotional depth and action-driven intensity. The film’s core revolves around the sensitive and affectionate relationship shared between a father and daughter, while also incorporating powerful action elements that elevate the emotional stakes of the story.

The film features a strong ensemble cast including Preethi Asrani, Lithanya, Bagavathi Perumal (Baks), Haripriya Isai, Aruvi Madhan, Chitra Lakshmanan, Sreeja Ravi, Vettai Muthukumar, Jensan Diwakar, Muruganantham, Munnar Ramesh, Lissy Antony, Kumar Natarajan, Vijayan, Praveena, Haritha, and Haripriya in pivotal roles, all contributing to the film’s emotional depth and realistic storytelling.

Adding further strength to the project is an accomplished technical team:

Writer & Director – Mu. Maran

Music Director – Vijay Antony

Director of Photography – Rajeev Rajendran

Editor – Vijay Antony

Production Designer – A. Raja

Costume Designer – G. Anusha Meenakshi

Executive Producer – D. Naveen Kumar

Production Executive – Annamalai Sami

Technical Head – Janarthanan

Casting Director – Sugumar Shanmugam

Stunt – Rajasekar

Stills – Magesh

Sound Engineer – S. Chandhrasekar

Costumer – Selvaraj

Sound Design – Rahamadullah

Sound Effects – Vijay Rathnam

PRO – Rekha

With its blend of action, emotional storytelling, relatable family sentiments, soulful music, and engaging treatment, “Appa Kutty” is expected to emerge as one of the most impactful action family entertainers of the season. The makers are confident that the film will leave audiences with excitement, emotions, and a memorable theatrical experience when it releases this August.

 

Our Score