full screen background image

13 படங்களுக்கு நீலகிரி தார் விருதுகள்! – சுயாதீன சினிமாவுக்கு சிவகுமார் பாராட்டு

13 படங்களுக்கு நீலகிரி தார் விருதுகள்! – சுயாதீன சினிமாவுக்கு சிவகுமார் பாராட்டு

தமிழ் சினிமாவில் குறைந்த செலவில் தரமான படைப்புகளை உருவாக்கும் சுயாதீன இயக்குனர்களை கௌரவிக்கும் நோக்கில், JD புரமோட்டர்ஸ் நடத்தும் மூன்றாம் ஆண்டு தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மொத்தம் 116 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 படைப்புகளுக்கு “நீலகிரி தார்” விருதுகள் வழங்கப்பட்டன. சுயாதீன சினிமாவுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக அமைந்தது.

இந்த விழாவை எம்டி பிரமோட்டர்ஸ் சார்பில் ஜாஸ்மின் டேவிட் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு படைப்பாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவருடன் தயாரிப்பாளர்-இயக்குநர் சி.வி.குமார், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், நடிகர்கள் ஆத்மா பேட்ரிக், மற்றும் அசோக் பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் விருந்தினர்களை வரவேற்று ஜாஸ்மின் டேவிட் பேசினார்.

“One and Only SS School of Creativity” பள்ளி மாணவர்களின் நேரடி இசை நிகழ்ச்சி விழாவின் சிறப்பம்சமாக அமைந்து, பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

ஜூரி குழு மற்றும் தேர்வுகள்

ஜூரி குழுத் தலைவராக இருந்த Sabu John Edathattil (“Guna”, “Sillunu Oru Kaadhal”, “Kuruthipunal” உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர்) சிறந்த படைப்புகளுக்கு உரிய மரியாதை செய்தார்.

முக்கிய விருதுகள்

INTERNATIONAL NARRATIVE FEATURE:

“Su Ryeon (Water Lilies)” – சிறந்த நாரேட்டிவ் திரைப்படம்
“August 16 1947” – சிறந்த முதல் திரைப்படம்
“BMW 1991” – மாஸ்டர் ஜி.எம். கவுதம் – சிறந்த குழந்தை நடிப்பு
“Thiru.Manickam” படத்திற்காக Samuthirakani – சிறந்த நடிகர்

GENERATION NEXT – TEEN INTERNATIONAL NARRATIVE FEATURE:

“Rhythm of Dammam” – விருது பெற்றது

INTERNATIONAL SHORT FILM:

“Finger Ring” – சிறந்த குறும்படம்
“Paraasakthi – The Goddess” – சிறந்த முதல் குறும்படம்

அதே படத்தில் நடித்த Pavel Navageethan – சிறந்த நடிகர்
“Lincoln” – ஜூரி சிறப்பு பாராட்டு

INTERNATIONAL DOCUMENTARY:

“Putulnama (Dolls Don’t Die)” – சிறந்த ஆவணப்படம்

STUDENT SHORT FILMS:

“Kaanada Kadalu (The Unseen Shore)”
“Love Isn’t Blind”
“A Salaam to Kalam”

— ஆகிய மூன்று படங்களுக்கு விழா சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது.

சுயாதீன படைப்பாளிகளுக்கு மேடையும் மரியாதையும் அளிக்கும் இந்த விருது விழா, எதிர்காலத்தில் இன்னும் பல புதிய குரல்களை தமிழ்சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

 

Our Score