full screen background image

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரன் புதிய தலைவராக தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரன் புதிய தலைவராக தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போதைய பொறுப்பாளர்களின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து 2026-29-ம் ஆண் டுகளுக்கான நிர்வாகிகள் பதவிகளுக் கான தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் தேர்தல் நேற்று நடந்தது.

இந்த முறை முரளி ராமசாமியின் ராம நாராயணன் அணி மற்றும் ஜி.கே.எம்.தமிழ்குமரனின் நலன் காக்கும் அணி என இரு அணிகள் களத்தில் இறங்கின. இது தவிர கதிரேசன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோரும் சுயேச்சையாக களம் கண்டனர். 1 தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் 1,576 பேர் பங்கேற்று வாக்கு செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், நலன் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ் குமரன் 788 வாக்குகள் பெற்று 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். முரளி ராமசாமி 261 வாக்குகள் பெற்றார். இதுவரை நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை தமிழ்குமரன் பெற்றுள்ளார்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் கமலக்கண்ணன், ஆர்கே சுரேஷ் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

2 செயலாளர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட தயாரிப்பாளர் கதிரேசன் 715 வாக்குகள் மற்றும் ராதாகிருஷ்ணன் 470 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் 

1.தேனப்பன்
2. அழகன் தமிழ்மணி
3. பைஜாடாம்
4. சித்ரா லட்சுமணன்
5. ஏழுமலை
6. தாய் சரவணன்
7. முருகன்
8. மகேந்திரன்
9.ஞானவேல்
10. இசக்கிராஜா
11. மாதேஷ்
12. தன சண்முகமணி
13. டேவிட்ராஜ்
14. சாலை சகாதேவன்
15. H. முரளி
16. ஜோதி
17. கபார்
18. ரஞ்சித்குமார்
19. பியாரிலால்
20. செந்தாமரை கண்ணன்
21. ராஜராஜன்
22. பாலாஜி
23. ஜெயசீலன்
24. முருகன்
25. அன்பு
26. பழனிவேல்

தற்போதைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் 2029 வரை தலைமையில் இருப்பார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் குமரனுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Our Score