full screen background image

ஹாட்ஸ்பாட்-டூ மச் – சினிமா விமர்சனம்

ஹாட்ஸ்பாட்-டூ மச் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை KJB Talkies நிறுவனத்தின் சார்பாக K.J.Balamanimarbhan, Aneel K Reddy இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதில் தம்பி ராமையா, பாஸ்கர், பிரியா பவானி சங்கர் – ஷில்பா, பிரிகிடா சாகா – மதுமிதா, அஷ்வின் குமார் – யுகன், ரக்ஷன் – ஜேம்ஸ், ஆதித்யா பாஸ்கர் – சத்யா, விக்னேஷ் கார்த்திக் – முகமது ஷெரிஃப், கே.ஜே. பாலமணிமார்பன் – கே.ஜே. பாலமணிமார்பன், பவானி ஸ்ரீ – நித்யா, சஞ்சனா திவாரி – ஷர்னிதா, ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்:-

ஒளிப்பதிவு: ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால், இசை – பின்னணி இசை: சதிஷ் ரகுநாதன், படத் தொகுப்பு: யு. முத்தையன், கலை இயக்குநர்: சி. சண்முகம், இணைத் தயாரிப்பாளர்: சி. சுரேஷ் குமார் – இந்துகுமார் எம், நிர்வாகத் தயாரிப்பாளர்: பிரியன், பி.ஆர்.ஓ – வேலு.

தமிழ் சினிமாவில் நம்முடைய சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை சொல்லுவதோடு கெட்ட விஷயங்களை ஆராதிக்க கூடாது என்பதை சொல்லியும் பல திரைப்படங்கள் வந்துள்ளன.

ஆனால், 2k கிட்ஸை தாண்டியும், இன்றைய Zen Z தலைமுறையினர் அனைத்து விதமான பண்புகளையும், மேன்மைகளையும், குணங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு இதுதான் இப்போதைய புதிய தலைமுறை என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

தே இயக்குரும் தயாரிப்பாளரும் இணைந்து உருவாக்கி இருந்த ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் இப்படிப்பட்ட கதை அம்சத்தோடுதான் வெளிவந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆனால் அத்துமீறல்களையும் சரசங்களையும் அனைத்துவித புனிதங்களையும் வெறுத்து ஒதுக்கும் இன்றைய ஜென் இஸட் கூட்டம் அந்தப் படத்திற்கு மொய்த்துக் கொண்டு வந்தது. இதனாலேயே அந்தப் படம் வந்த பொழுதில் பேசு பொருள் ஆனது.

இப்போதும் அதே மாதிரியான கதை, திரைக்கதையில் அடுத்த பாகத்தையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் இயக்குர் விக்னேஷ் கார்த்திக்.

சென்ற முதல் பாகத்தில் இவர்தான் இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளரான பாலமணிவர்மன் என்ற தயாரிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்தவரிடம் படத்திற்கு கதை சொல்ல வந்தேன் என்று சொல்லி நான்கு கதைகளை சொல்லி கடைசியாக அவருடைய மகளை காதலிப்பதால் அந்த திருமணத்திற்கு ஒப்புதல் வேண்டும் என்று கேட்டு திருமணம் செய்து கொண்டார். அத்துடன் அந்தப் படமும் முடிந்தது.

இந்த இரண்டாவது படத்தின் ஆரம்பம் எப்படி எனில் அப்படி காதலித்து திருமணம் செய்த அந்த மனைவிக்கு கணவன் முதல் இரவில் தொட்டவுடன் எரிச்சல் ஆகிவிட்டதாம். நாம் ஒரு நல்ல நண்பனாக இருக்கத்தான் காதலித்தேன் என்று அசுரத்தனமான ஒரு மொக்கை வசனத்தை பேசுகிறார்  மனைவி. காரணம் என்ன என்று கணவன் கேட்ட பொழுது நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். லெஸ்பியன். நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.. அவளுடன்தான் நான் உடலுறவு வைத்துக் கொள்வேன் என்கிறார்.

இந்தப் பெண்ணின் கணவன் ரொம்ப ரொம்ப முற்போக்கான ஆளாக இருப்பதால் தன் மனைவி காதலிக்கும் பெண்ணையும் தன் மனைவியையும் சேர்த்து வைத்துவிட்டு தான் அவர்களிடம் இருந்து விலகிவிடலாம் என்று நினைக்கிறான்.

தற்காக தன் மனைவியின் காதலியை ஒரு இயக்குராக மாற்றி அவரை தன்னுடைய மாமனாரிடம் அனுப்பி வைத்து கதை சொல்ல வைக்கிறார். இதுதான் இந்தப் படத்தின் துவக்கம்.

கதை சொல்ல வந்த பெண்ணான பிரிய பவானி சங்கர் மூன்று கதைகளை சொல்கிறார். அந்த மூன்று கதைகளின் முடிவில் அவர் தன்னுடைய லெஸ்பியன் காதல் கதையையும் சொல்கிறார். அதில் முதல் இரண்டு கதைகளையும் நிச்சயமாக நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏற்றுக் கொள்ள கூடியதாகத்தான் இருக்கிறது. ஆனால் மூன்றாவது கதைதான் சொதப்பிவிட்டது

முதல் கதையில் பள்ளி படிப்பையோ அல்லது கல்லூரி படிப்பைகூட முடிக்காத நிலைமையில் இரண்டு இளைஞர்கள் அன்றைய ராசா, தாதா என்ற இரண்டு ஹீரோக்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள், அந்த ஹீரோக்களை பற்றி யார் தவறாக சொன்னாலும் கை நீட்டும் அளவுக்கு வெறியர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் ராசாவின் ரசிகனாக நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அவருடைய அம்மா, அப்பாவோடு எளிமையான வாழ்க்கையில் வாழும் ஒரு அடித்தட்டு மனிதன். ஆனால் தன்னுடைய உடல் உயிர் ஆவி அனைத்தும் தன்னுடைய ஹீரோ ராசாவுக்கே என்கிறார் இந்த ஆதித்யா பாஸ்கர்.

தன்னுடைய காதலியின் தந்தை தன்னுடைய தெய்வமான ராசாவை திட்டியதால் வருங்கால மாமனாரையே அடித்து உதைக்கும் அளவுக்கு போகிறார் ஆதித்யா.

ஒரு நாள் ஆதித்யாவின் அம்மாவும், அப்பாவும் கடத்தப்படுகிறார்கள். அதேபோல் தாதாவின் தீவிர ரசிகனான வெறியனான ரக்னின் மனைவியும் கடத்தப்படுகிறார். இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட தினத்தில்தான் ராசாவின் படமும், தாதாவின் படமும் ஒன்றாக திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியிட்டு கொண்டாட்டங்களில் இருந்த இந்த இருவருக்கும் தங்களுடைய குடும்பத்தினர் கடத்தப்பட்டது அறிந்து அதிர்ச்சி ஆகிறார்கள். இவரது குடும்பத்தினரை கடத்தியவன் ஒரேயொரு கோரிக்கைதான் வைக்கிறார். “சூப்பர் ஸ்டார் நடிகர்களான ராசாவும், தாதாவும் தன்னுடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்கிறார்.

இப்போது ராசாவையும், தாதாவையும் தன்னுடைய குடும்பத்திற்காக உதவி செய்ய வைக்க, ஆதித்யாவும் ரக்னும் அலை மோதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவர்களின் தரிசனமே கிடைக்கவில்லை.

அடுத்து என்ன ஆனது என்பது அந்த பெண் இயக்குர் சொல்லும் கதையில் இருக்கிறது.

அடுத்த கதையில் 20 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்த தம்பி ராமையா ஓய்வு பெற்றுவிட்டு வீடு திரும்புகிறார். தன்னுடைய மகளை தன்னுடைய அம்மாவின் மறுபிறப்பாக நினைத்து பெருமைப்படும் தம்பி ராமையா, அவருடைய மகள் அல்ட்ரா மாடலாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அவருடைய வீடு தேடி வந்த அவருடைய முன்னாள் முதலாளி “திருமண சம்பந்தம் பேசலாமா என்று கேட்கின்ற தருணத்தில் தம்பி ராமையாவின் மகள் “மாப்பிள்ளையுடன் கொஞ்ச நாட்கள் டேட்டிங் போய் பழக வேண்டும். செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் இவரை திருமணம் செய்யலாமா வேண்டாமா என்று நான் முடிவு செய்வேன் என்கிறார்.

ஆயிரம் தேள்கள் ஒன்றாக கொட்டியது போல அதிர்ச்சியின் உச்சத்துக்கே செல்லும் தம்பி ராமையா, தன் மகளை எப்படி குணப்படுத்தினார் என்பது இயக்குர் சொல்லும் திரைக்கதையில் இருக்கிறது.

மூன்றாவதாக இப்போது இந்த 2025-ம் ஆண்டில் இருக்கும் அஸ்வின் என்ற இளைஞன், ஒரு போனில் கிடைத்த ஒரு வித்தியாசமான அலைவரிசை டெக்னிக்கால் 20050 க்கு சென்று விடுகிறார். அந்த 2050-ல் இருக்கும் பவானி ஸ்ரீயை இவர் காதலிக்கிறார். இவருடைய காதல் பவானிக்கு முதலில் புரியவில்லை.

2025-ல் இருந்து ஒருவன் தன்னை காதலிப்பதாக சொல்வதை ஏற்க மறுக்கிறார் பவானிஸ்ரீ. ஆனால் அது உண்மை என்று தெரிந்த பின்பு பவானிஸ்ரீ என்ன செய்தார்?.. அந்த காதல் வொர்க் அவுட் ஆனதா?.. இல்லையா?.. என்பதும் இந்தப் பெண் இயக்குர் சொல்லும் திரைக்கதையில் இருக்கிறது.

முதல் கதையில் எம்.எஸ்.பாஸ்கர் மூலமாக சொல்லப்படும் அத்தனை விஷயங்களும் தமிழ்நாட்டுக்கு இப்போதைக்கு மிக மிக தேவையானது.

தன்னுடைய சொந்த வீட்டில் தன்னுடைய குடும்பத்திற்கு வெளியில் சென்று பால் வாங்கி வரகூட யோசிக்கும் இன்றைய இளைய தலைமுறையினர், காலையில் 3 மணிக்கு எல்லாம் தியேட்டர் வாசலுக்கு வந்து தன்னுடைய அபிமான நட்சத்திரத்திற்கு பாலபிஷேகம் செய்கின்ற கொடுமை எல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். அதுவும் தமிழ்நாட்டில் மிக அதிகமாக நடந்து வருகிறது.

அந்த கொடூரத்தை சுட்டிக் காட்டியிருக்கும் இயக்குர், எம்.எஸ்.பாஸ்கர் மூலமாக அத்தனை பேருக்கும் செருப்படி விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் அந்த உச்சகட்ட நடிப்பு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். அவர் சொல்கின்ற அத்தனை விஷயங்களும் உண்மைதான். அவர் பேசுவதெல்லாம் இப்போது தமிழகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான அப்பாமார்களின் கருத்துதான்.

இந்தப் போர்ஷனிலும் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார்கள் அனைவருமே..! எம்.எஸ்.பாஸ்கருக்கு போட்டியாகவே இதில் நடித்திருக்கிறார் அவருடைய மகன் ஆதித்யா பாஸ்கர். தாதாவின் ரசிகனாக நடித்திருக்கும் ரக்சன் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் பிரமாதம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. ஆனால், அதுதான் உண்மை.

இரண்டாவது கதையில் முதல் கதைக்கு உயிரூட்டிய எம்.எஸ்.பாஸ்கருக்கு போட்டியாக தம்பி ராமையா களமிறங்கி ஜெயித்திருக்கிறார்.

ஒருவரின் ஆடை அவரவர் சொந்த விருப்பம்தான். எந்த மாதிரி ஆடைகளை வேண்டுமானாலும் அவர் அணிவதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் எந்தெந்த இடத்தில் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது இந்த சமூகம் நமக்கு சொல்லி இருக்கும் ஒரு பாடம்.

அந்த சமூகத்தில் நாம் வாழும்போது அந்த கட்டுப்பாட்டில் நாம் கொஞ்சம் இறங்கித்தான் போக வேண்டும். இதை புரியாத தன்னுடைய மகளுக்கு மிகப் பெரிய ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து புரிய வைக்கிறார் தம்பி ராமையா.

அவருடைய அந்தப் பாடம் எடுக்கும்விதமும், சொல்வதை பாடமாக நினைத்து அவர் பேசிய வசனங்களும் அட்டகாசம் என்று சொல்லலாம். நிச்சயம் இதுவும் இப்போதைய ஜென் இஸட் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

அந்த அளவுக்கு தம்பி ராமையாவும், அவருடைய மகளாக நடித்த சஞ்சனா திவாரியும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் நமது பாராட்டுக்கள்.

மூன்றாவது கதையில் படத்தின் இயக்குரான விக்னேஷ் கார்த்திக்கும் நடித்திருக்கிறார். அவருடைய அந்தக் காலம் கடந்த காதல் அவருக்கும் அவரை காதலிக்கும் அந்த பெண்ணுக்கும் இடையிலான அந்த நேரில் பார்க்காத காதல் எப்படி ஒர்க் அவுட் ஆனது என்பது புரிந்து கொள்வது சிரமம்தான்.

இந்தக் கதையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களுக்கு இயக்குர் பதில் சொல்லாமல் விட்டிருப்பதால் இந்தக் கதை மட்டும்தான் ரசிகர்களுக்கு புரியாமல் இருக்கிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவாக ந்தக் கதையை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் நடிப்பில் இருவருமே கொஞ்சமும் குறை வைக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் சிறந்துதான் விளங்குகிறது. ஒளிப்பதிவாளர்களான ஜோசப் பால் மற்றும் ஜெகதீஷ் ரவி இருவரும் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவிதமான ஒளிப்பதிவினை செய்து கொஞ்சமும் உறுத்தல் இல்லாத அளவுக்கு படத்தின் மேக்கிங்கை தரம் உயர்த்தி இருக்கிறார்கள்.

எடிட்டரான முத்தையா முதல் இரண்டு கதைகளை நறுக்கி தந்தது போல மூன்றாவது கதையையும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் தொகுத்திருந்தால் நிச்சயம் படம் அனைவருக்கும் புரிந்திருக்கும்.

சதீஷ் ரகுநாதனின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை நமக்கு பிடித்துப் போனதாக இருந்தது. அதிலும் பிரியா பவானி சங்கரும், தயாரிப்பாளரும் பேசுகின்ற இடங்களில் பின்னணி இசையை அவ்வளவு அழகாக அவ்வப்பொழுது சிரிப்பை தூண்டுவது போலவே வைத்திருக்கிறார்.

தன்னுடைய காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கதை சொல்லியாக மாறி வந்திருக்கும் பிரியா பவானி சங்கர், படம் முழுவதும் மிக மிக அழகான அருமையான நடிப்பையும் கொட்டி இருக்கிறார்.

அதிலும் தயாரிப்பாளருக்கு நீ போ வா என்று நான் எதுவும் சொல்லாமல் நீங்களாக உரிமை எடுத்துப் பேசக் கூடாது…” என்று லெக்சர் கொடுக்கும் இடத்திலும், தயாரிப்பாளரை தாஜா செய்ய அவரை மாமா என்று அழைத்தும் சிரிப்பை வரவழைத்திருக்கிறார். மாமா என்று அழைத்த பின்பும் பிரியாவே மீண்டும் மீண்டும் பல இடங்களில் சார் என்று தயாரிப்பாளரை அழைத்திருப்பது தான் கொஞ்சம் திருடலாக இருக்கிறது. அந்த மாமாவை அப்படியே கடைசிவரையிலும் பாலோ செய்திருக்கலாம்.

அனைத்து புனிதங்களையும், பாரம்பரியங்களையும் மீறுவதுதான் இப்போதைய வாழ்க்கை முறை என்கின்ற ஒரு தப்பான அர்த்தத்தை எடுத்lfருக்கும் நமது இளைய சமூகத்திற்கு முதல் இரண்டு கதைகள் நிச்சயமாக ஒரு பாடத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இயக்குரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனால் அதை இனிமேல் வரக் கூடிய அடுத்தடுத்த படங்களில் நல்லவிதமாக பயன்படுத்துவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

RATING : 3.5 / 5

Our Score