full screen background image

2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 20 திரைப்படங்களின் பட்டியல்!

2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 20 திரைப்படங்களின் பட்டியல்!

தமிழ் சினிமாவில் 2025 ஆம் ஆண்டு 283 தமிழ் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகியுள்ளன.

இவற்றில் 100 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து 7 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் 3 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

25 கோடி முதல் 50 கோடிக்குள் 10 படங்களும்,

15 கோடி முதல் 25 கோடி ரூபாய் செலவில் 8 திரைப்படங்களும்,

8 கோடி முதல் 15 கோடிக்குள் 17 திரைபடங்களும்,

5 கோடி முதல் 8 கோடி ரூபாய் செலவில் 17 படங்களும்,

3 முதல் 5 கோடி ரூபாய் செலவில் 53 திரைபடங்களும்,

 3 கோடி ரூபாய் செலவில் 170 திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டது.

2025-ம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகை சுமார் 3,300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் திரையரங்குகளில் படங்களை வெளியிட்டதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வருவாய் இந்திய அளவில் 855 கோடி, வெளிநாட்டு திரையரங்குள் மூலம் 255 கோடி ரூபாய் ஆக 1,110 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

தொலைகாட்சி, ஓடிடி, ஆடியோ, இந்தி உரிமைகள் விற்பனை மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வருவாய் 1790 கோடி ரூபாய்.

ஆக படத் தயாரிப்பில் செய்யப்பட்ட மொத்த முதலீட்டு தொகை 3,300 கோடி ரூபாயில் 2,950 கோடி ரூபாய் தயாரிப்பாளர்களுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.

இந்த வருடம் வெளியான நேரடி தமிழ் படங்களில் 15 முதல் 500 கோடி ரூபாய்வரை மொத்த வசூல் செய்த முதல் 20 படங்களின் பட்டியல் இது :

  1. கூலி – 501.25
  2. குட் பேட் அக்லி – 238.50
  3. டிராகன் – 147.00
  4. விடாமுயற்சி – 138.00
  5. டியூட் – 114.50
  6. ரெட்ரோ – 96.75
  7. மதராஸி – 96.50
  8. தக்லைப் – 96.25
  9. தலைவன் தலைவி – 90.50
  10. டூரிஸ்ட் பேமிலி – 85.00

11.வீர தீர சூரன் – 69.00

  1. இட்லி கடை – 65.25
  2. பைசன் – 63.25
  3. மதகஜராஜா – 63.00
  4. மாமன் – 51.00
  5. காந்தா – 35.00
  6. குடும்பஸ்தன் – 28.50

18.ஆண் பாவம் பொல்லாதது – 25.50

  1. டி.டி. நெக்ஸ்ட் லெவல் – 23.25
  2. காதலிக்க நேரமில்லை – 15.75

தகவல் உதவி – தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

Our Score