full screen background image

ரைட்- சினிமா விமர்சனம்

ரைட்- சினிமா விமர்சனம்

RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் ரைட்”.

இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து,  முதன்முறையாக முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்   பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக  அறிமுகமாகிறார்.

தயாரிப்பு நிறுவனம் – RTS Film Factory, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளாஎழுத்து, இயக்கம் சுப்ரமணியன் ரமேஷ்குமார்இசை குணா பாலசுப்ரமணியன்ஒளிப்பதிவு – M பத்மேஷ்எடிட்டிங் நாகூரான் ராமசந்திரன்கலை தாமுஸ்டண்ட் மிராக்கிள் மைக்கில்நடனம் ராதிகா, பத்திரிக்கை தொடர்பு சதீஷ் (AIM).

ஜில்லா, புலி ஆகிய படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஒரு குற்றம் நடந்தாலும் இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால் அது ஒரு சிலருக்கு சரியாகவே தெரியும். இன்னும் சிலருக்கு அது தவறாக தெரியும். ஆனால். பொதுவான நபர்களுக்கு குற்றம் ஒரு குற்றமாகத்தான் பார்க்க தெரியும். பாதிக்கப்பட்டவனாக இருந்தால்தான் அவர்களுக்கு அந்த குற்றத்தின் தன்மை புரிந்து இந்த குற்றம் எதற்காக நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடத்தப்பட்டது என்பதை எல்லாம் பார்க்கும் பொழுது ஒரு குற்றத்தின் பின்னணியில் இருக்கும் சில விஷயங்கள் பலருக்கும் சரியானதாகவே இருக்கும். அப்படி ஒரு கதை, திரைக்கதையில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான சுப்பிரமணியன் ரமேஷ் குமார்.

கேகே நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நட்டி நடராஜ். அன்றைய தினம் பிரதமர் தமிழ்நாடு வந்திருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு ஸ்டேஷனில் இருந்த மொத்த காவலர்களையும் அழைத்துக் கொண்டு பாதுகாப்புக்கு சென்றுவிட்டார். ஸ்டேஷனில் இப்போது இருப்பது ஒரு லேடி கான்ஸ்டபிளும், ஏட்டு மூணாறு ரமோஷும்தான்.

அதே நேரம் தன்னுடைய ஒரே மகன் காணவில்லை என்று சொல்லி அருண் பாண்டியன் அந்த ஸ்டேஷனுக்கு புகார் சொல்ல வருகிறார். இது போன்ற பல காணவில்லை வழக்குகளை கையாண்ட அனுபவம் இருப்பதால் நல்லா தேடிப் பாருங்கள் என்று சொல்லி அருண் பாண்டியனை அனுப்பி வைக்கிறார் மூணாறு ரமேஷ்.

ஆனால் அருண் பாண்டியன் அங்கிருந்து நேரே போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் சொல்ல அங்கிருந்து உடனடியாக விசாரிக்கும்படி கே.கே. ஸ்டேஷனுக்கு உத்தரவு வருகிறது. அருண்பாண்டியன் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கதறுகிறார்.

அதே நேரம் அதே ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அக்சரா ரெட்டி தன்னுடைய கல்யாணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். போலீஸ் லாக்கப்பில் மாமூல் திருடனான தங்கதுரையும், இன்னொருவரும் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் அப்போது யாரோ ஒருவன் அக்சராவின் லேப்டாப்பை தன்னுடைய தொழில் நுட்ப அறிவால் ஹேக் செய்து அதன் மூலமாக போலீஸ் ஆரை மிரட்டுகிறான்.

அந்த போலீஸ் ஸ்டேஷனில் டைம் பாம் வைத்திருப்பதாகவும் அந்த ஸ்டேஷனில் இருந்து யார் வெளியில் வந்தாலும், ஸ்டேஷனில் குண்டு வெடிக்கும் என்று அந்த மர்ம நபர் மிரட்டுகிறார்.

பிரதமர் வந்திருக்கும் நாள் என்பதால் இந்தப் பிரச்சனையை எப்படியாவது ஸ்டேஷனுக்குள்ளே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். எப்படியாவது பிரச்சனையை முடித்துவிட்டு வெளியில் வாருங்கள் என்று போலீஸ் கமிஷனர், அக்சரா ரெட்டிக்கு அறிவுறுத்துகிறார். அந்த மர்ம நபர் யார் என்று தெரியாமல் அக்சரா ரெட்டியும், மூணார் ரமேஷும் இருக்க

மூணார் ரமேஷின் சீட்டுக்கு அடியில் டைம் வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மூனாறு ரமேஷ் சீட்டை விட்டு எழுந்தாலே குண்டு வெடிக்கும் என்பதால் அவரும் கடைசிவரையில் சீட்டிலேயே உட்கார வேண்டி இருக்கிறது. இந்தப் பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளித்தார்கள்? நட்டி நடராஜ் திரும்பி வந்தாரா? அருண்பாண்டியனின் மகனை கண்டுபிடித்தார்களா?.. காவல்துறை என்னதான் நடவடிக்கை எடுத்தது? என்பதுதான் இந்த ரைட் படத்தின் திரைக்கதை.

படத்தின் நாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாகவே நடித்து இருக்கிறார் நட்டி நடராஜ். போலீஸ் வேடத்தில் நட்ராஜ் நடிக்கும் எத்தனையாவது படம் இது என்று தெரியவில்லை. ஆனால், போலீஸ் டிரஸ்ஸுக்கு மிகவும் பொருத்தமான, கச்சிதமான நடிகராக இருக்கிறார் நடராஜ்.

முதல் சில நிமிடங்களிலேயே ஸ்டேஷனை விட்டு வெளியேறும் அவர் இடைவேளைக்கு அப்புறம்தான் மீண்டும் ஸ்டேஷனிற்குள் நுழைகிறார் அவ்வளவு நீண்ட இடைவெளி விட்டிருந்தாலும் நடராஜ் தான் இருந்த கட்சிகளில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரான கம்பீரத்தோடு நடித்திருக்கிறார்.

இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஒரு பரிதாபமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் அருண் பாண்டியன் தன் மகனை காணவில்லை என்று பரிதவிப்பிலிருந்து, படபடப்பு, பதைபதைப்பு இதையெல்லாம் ஒன்றாக சேர்த்து வைத்து பரிதாபமான அப்பா கேரக்டரில் மிக எளிதாக நடித்திருக்கிறார். அவருடைய தோற்றமும், அவருடைய பேச்சும் திரைக்கதையில் குண்டு வைத்திருப்பது இவர்தானா என்கின்ற ஒரு கேள்வியைகூட எழுப்பி அவரை சந்தேகிக்க வைத்திருக்கிறது.

சப்இன்ஸ்பெக்டராக இருக்கும் அப்சரா ரெட்டி தன்னுடைய திருமணம் என்பதைகூட மறந்து போய், எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் இவர் சாகலாம் என்பதை தெரிந்தாலும் ஒரு போலீஸ் அதிகாரியாக தன்னுடைய கடமையை கச்சிதமாக செய்வதுபோல இவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

பறந்து பறந்து சண்டை இட்டு வசனங்களை வீராவேசமாக பேசி உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களைவிடவும் மூணாறு ரவி இந்தப் படத்தில் கச்சிதமாக, பரிதாபமான ஏட்டுவாக நடித்திருக்கிறார்.

அவர் எழுந்தாலே குண்டு வெடிக்கும் என்பதை சொல்லப்பட்டு விட்டதால் உட்கார்ந்து நிலயிலேயே அவர் படும் பரிதாபமான தோற்றத்தை நமக்கு காண்பித்து ஐயோ பாவம் என்று நம்மையே சொல்ல வைத்திருக்கிறார். தன்னுடைய இயலாமையை அவர் காட்டுகின்ற போதிலும் அவருக்குள் இருக்கும் பயம், பீதி இரண்டையுமே தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனையே கோர்ட்டாக மாற்றி நீதி பரிபாலனம் செய்ய வந்திருக்கும் நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, தன்னுடைய வெள்ளி குரலாளேயே நம்மை கவர்கிறார். ஒரு சாதாரண நீதிபதி எந்த அளவுக்கு இருப்பாரோ, அதே அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார் வினோதினி.

கைதியாக நடித்திருக்கும் தங்கத்துரை, போலீசுக்கும், திருடர்களுக்கும் எந்த அளவுக்கு நட்பு இருக்கும் என்பதற்கு உதாரணமாக நடித்திருக்கிறார். இளம் ஜோடிகளாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார், யுவினாவும் ஒரு சிறந்த ஜோடி என்பதை போல நடித்திருக்கிறார்கள். மற்றபடி படத்தில் நடித்திருக்கும் மற்றவர்களும், தங்களுடைய நடிப்பை ஓரளவுக்கு காட்டி இருக்கிறார்கள்.

ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நடைபெறும் கதை என்பதால் ஸ்டேஷனில் நடக்கின்ற காட்சிகளை வெவ்வேறுவிதமான கோணத்தில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம் பத்மேஷ்.

இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியம் இசையில் பாடல்கள் நம் மனதை தொட வில்லை .ஏதோ திரையில் ஒலித்ததை நாம் பார்த்தோம் என்ற வகையில்தான் இருக்கிறது. ஆனால், பின்னணி இசையில் கொஞ்சம் நம்முடைய கண்களை திரையைவிட்டு அகல விடாத அளவுக்கு இசையை கொடுத்திருக்கிறார்.

கலை இயக்குநர் தாமுவையும் மனதார பாராட்ட வேண்டும். அந்த போலீஸ் ஸ்டேஷனை கச்சிதமாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார். படத் தொகுப்பாளரான நாகூரான் ராமச்சந்திரனும் இந்த படம் முன் பின் காலகட்டத்தில் நடப்பதை இணைத்து காட்டுகிறது என்பதால் அதற்கான தேர்வில் எந்தக் குறையும் இல்லாமல் மிக அழகாக மொத்தப் படத்தையும் வடிவம் வைத்து கொடுத்திருக்கிறார்.

பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

போலீஸ் ஸ்டேஷனில் குண்டு வெடிக்குமா? எப்படி குண்டு வைத்தார்கள்? எப்படி அங்கே இருக்கும் லேப்டாப்பை ஹேக் செய்தார்கள் என்பதற்கெல்லாம் பதிலாக ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் டைப்பில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நடக்கின்ற கதை என்றாலும் கொஞ்சம்கூட திரைக்கதையில் சோர்வு இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகளில் அந்த சஸ்பென்ஸ் திரில்லரை ஏற்றிக் கொண்டே சென்றிருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

இப்படி எல்லாம் நடக்குமா? நடக்க சாத்தியம் உண்டா? என்றெல்லாம் லாஜிக் மிஸ்டேக்கை  நாம் அடுக்கிக் கொண்டே போனாலும், படத்தின் கதை திரைக்கதையில் பல டிவிஸ்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து இந்தப் படத்தை ரன் பாஸ்டில் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். புத்திசாலித்தனமான திரைக்கதைக்காக அவரையும் நாம் மனதாரப் பாராட்டுகிறோம்.

இந்த ரைட்உண்மையாகவே ரைட் போலாம்என்று சொல்ல வைத்திருக்கிறது!

RATING : 3.5 / 5

 

Our Score