full screen background image

‘கரம் மசாலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்!

‘கரம் மசாலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்!

நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குநர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக  உருவாகியுள்ள ‘கரம் மசாலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் முன்னணி நடிகர் விமல்  நாயகனாக நடித்துள்ளார். சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா,  மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை அப்துல் மஜீத் இயக்குகிறார். ஒளிப்பதிவு  கே. கோகுல்,  எடிட்டிங் ஏ.ஆர்.சிவராஜ், இசை – பைஜூ ஜேக்கப், E.J.ஜான்சன்,  நிர்வாக தயாரிப்பு மு.தென்னரசு, எம்.ரகு. கிரியேட்டிவ் ஆர்கனைஸேசன் பாஸ்கர் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்.

இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாராணமாக வீடு, திருமணம், தொழில்  அனைத்திலும் அவர்களின் பங்கு உள்ளது.

அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும், கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக  இப்படத்தை உருவாக்கியுள்ளார் ‘தமிழன்’ படப் புகழ் இயக்குநர் அப்துல் மஜீத்.

 

பெரியவர்கள்  முதல் குழந்தைகள்வரை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கொண்டாடும்வகையிலான கலக்கலான கமர்ஷியல்  காமெடிப் படமாக இப்படம் இருக்கும்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Our Score