2024-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்கள் கர்நாடகாவில் பெற்ற வசூல் விபரம் :
விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் 32 கோடி வசூல் செய்துள்ளது. இதில் ஷேராக 14 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் 26 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. ஷேராக 12 கோடி கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்து ஒன்பது கோடி ரூபாயை ஷேராக பெற்றுள்ளது.
கமலஹாசன் நடித்த ‘இந்தியன்-2′ திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்து நான்கு கோடியே 50 லட்சம் ரூபாயை ஷேராக பெற்றுள்ளது.
தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்து ஷேராக நான்கு கோடியே ஐம்பது லட்சம் வழியை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் ஆறு கோடியே 75 லட்ச ரூபாயை மொத்தமாக வசூல் செய்து அதில் மூன்று கோடி ரூபாயை ஷேராக பெற்றுள்ளது.
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் ஆறு கோடியே 75 லட்ச ரூபாயை மொத்த வசூல் செய்து அதில் மூன்று கோடி ரூபாயை ஷேராக பெற்றுள்ளது.
தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 4 கோடியை 50 லட்ச ரூபாயை மொத்த வசூல் செய்து அதில் 2 கோடி ரூபாயை ஷேராக பெற்றுள்ளது.
சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை-4’ திரைப்படம் 4 கோடியே 50 லட்சம் ரூபாயை மொத்த வசூலாக பெற்று அதில் 2 கோடி ரூபாய் ஷேர் ஆக பெற்றுள்ளது.
விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் மொத்த வசூல் ஆக நான்கு கோடி ரூபாயை பெற்று அதில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாயை ஷேராக பெற்றுள்ளது.









