full screen background image

நடுத்தரக் குடும்பத்தின் கதையைப் பேச வருகிறது ‘தோனிமா’ திரைப்படம்..!

நடுத்தரக் குடும்பத்தின் கதையைப் பேச வருகிறது ‘தோனிமா’ திரைப்படம்..!

மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பேசும் படங்கள் என்றுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வரிசையில், நடுத்தரக் குடும்பங்களில் யதார்த்த அனுபவங்களை திரையில் காட்ட வருகிறது ‘தோனிமா’ திரைப்படம். 

சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்துள்ள இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார் ஜெகதீசன் சுப்பு. 

காளி வெங்கட் மற்றும் ரோஷ்னி பிரகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் விஷவ் ராஜ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் சர்மா, பி.எல்.தேனப்பன், கல்கி ராஜன், ’ஆடுகளம்’ ராஜாமணி, ’சுப்ரமணியபுரம்’ விசித்திரன், ‘சிகை’ படத்தின் சசி, மொக்லி கே மோகன், பொன்னேரி சுஜாதா, மாயா முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் முனீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாக்யராஜ் மற்றும் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இபப்டத்திற்கு இஜே ஜான்சன் இசையமைத்துள்ளார்.

தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் ‘தனம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக ‘கோடி’ என்ற குடும்பத்தின் மீது அக்கறை காட்டாத ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார்.

இந்தத் தம்பதியினரின் மகன் கடுமையான உடல் நலப் பிரச்சினையை எதிர்கொள்வதால், குடும்பம் கடினமான தடைகளை எதிர்கொள்கிறது. இந்த சவால்களை கடப்பதற்கான அவர்களின் பயணம்தான் இந்தக் கதையின் மையம். இது நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து, பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்ற வைக்கும்.

இந்தப் படத்தின் முழு வெளியீட்டு உரிமையையும் எஸ்.பி.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.பி.ராஜா சேதுபதி பெற்றுள்ளார்.

Our Score