full screen background image

2023-ம் ஆண்டிற்கான உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

2023-ம் ஆண்டிற்கான உண்மைத் தமிழன் திரைப்பட விருதுகள்…! 

சென்ற 2023-ம் ஆண்டில் தியேட்டர்களில் மட்டும் 242 படங்களும், ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக 8 படங்களும் வெளியாகியுள்ளன.

நாம் இதுவரையிலும் கடந்த 10 வருடங்களாக வெளியிட்டிருக்கும் உண்மைத்தமிழன் விருதுகளில் தியேட்டர்களில் வெளியான படங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளோம்.

இந்த வருடமும் அதேபோல் ஓடிடி, மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக வெளியான படங்களைக் கணக்கில் எடுக்காமல் தியேட்டர்களில் மட்டும் வெளியான 242 படங்களில் நாம் பார்த்தவரையிலும் சிறந்த படைப்பாளிகளை, நடிகர், நடிகைகளை. தொழில் நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்துள்ளோம்.

எப்போதும்போல இந்தாண்டும் சிறந்த கலைஞர்களையும், திரைப்படங்களையும் தேர்வு செய்வது மிகக் கடினமாக இருந்தது. பல்வேறு விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, நடுநிலைமை தவறாமல், யார், எவர் என்றெல்லாம் யோசிக்காமல்தான் 2023-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களும் தேர்வு செய்திருக்கிறோம்..!

இதில் விடுபட்டுப் போன நல்ல, திறமையான கலைஞர்களும், படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மயிரிழையில் மில்லி செகண்ட் இடைவெளியில் அவைகள் விடுபட்டிருக்கின்றன. அந்தப் படைப்பாளிகளும், கலைஞர்களும் அடுத்தடுத்து இதைவிடவும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்து தங்களை நிரூபிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்..!

வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நமது இணையத்தளத்தின் வாசகர்கள் சார்பாகவும், தமிழ்ச் சினிமாவின் தீவிர ரசிகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..! 

2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்கான உண்மைத்தமிழன் விருதுகள்..!

 

  1. சிறந்த திரைப்படம் – முதல் பரிசு – விடுதலை – 1
  2. சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு – மாமன்னன்
  3. சிறந்த திரைப்படம் – மூன்றாம் பரிசு – சித்தா
  4. சிறந்த நகைச்சுவை திரைப்படம் – ஆயிரம் பொற்காசுகள்
  5. சிறந்த பேய் படம் – டிடி ரிட்டர்ன்ஸ்
  6. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – மார்க் ஆண்டனி
  7. சிறந்த இயக்குநர் – வெற்றிமாறன் – விடுதலை-1
  8. சிறந்த இயக்குநர்– சிறப்பு விருது – மாரி செல்வராஜ் – மாமன்னன்
  9. சிறந்த புதுமுக இயக்குநர் –  மந்திரமூர்த்தி – அயோத்தி
  10. சிறந்த புதுமுக இயக்குநர் – சிறப்பு விருது – ஷான் – பொம்மை நாயகி
  11. சிறந்த கதை – வெற்றிமாறன் – விடுதலை-1
  12. சிறந்த கதை – சிறப்பு விருது – மாரி செல்வராஜ் – மாமன்னன்
  13. சிறந்த திரைக்கதை – ஆதிக் ரவிச்சந்திரன் – மார்க் ஆண்டனி
  14. சிறந்த திரைக்கதை – சிறப்பு விருது – சி.யு.அருண் குமார் – சித்தா
  15. சிறந்த வசனம் – மாரி செல்வராஜ் – மாமன்னன்
  16. சிறந்த வசனம் – சிறப்பு விருது – மு.களஞ்சியம் – முந்திரிக்காடு
  17. சிறந்த நடிகர் – வடிவேலு – மாமன்னன்  
  18. சிறந்த நடிகர்– சிறப்பு விருது –  சமுத்திரக்கனி – தலைக்கூத்தல்
  19. சிறந்த புதுமுக நடிகர் – வெங்கட் செங்குட்டுவன் – மதிமாறன்
  20. சிறந்த புதுமுக நடிகர் – சிறப்பு விருது – புகழ் – முந்திரிக்காடு
  21. சிறந்த புதுமுக நடிகை – பானுஸ்ரீ – விடுதலை-1
  22. சிறந்த புதுமுக நடிகை – சிறப்பு விருது – சுபபிரியா – முந்திரிக்காடு
  23. சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் – தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்ஹானா
  24. சிறந்த நடிகை – சிறப்பு விருது – அபர்ணா தாஸ் – டாடா
  25. சிறந்த துணை நடிகர் – காளி வெங்கட் – ஹர்ஹாரா, பீட்சா-3, கிடா                                                     
  26. சிறந்த துணை நடிகர் – சிறப்பு விருது – ‘ஆடுகளம்’ முருகதாஸ் – ராஜாமகள்
  27. சிறந்த துணை நடிகை – ரோகிணி – தண்டட்டி
  28. சிறந்த துணை நடிகை – சிறப்பு விருது – அபர்ணதி – இறுகப்பற்று
  29. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – எம்.எஸ்.பாஸ்கர் – பார்க்கிங், மதிமாறன்
  30. சிறந்த குணச்சித்திர நடிகர் சிறப்பு விருது –  சார்லி – எறும்பு, டி-3
  31. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – வசுந்தரா – தலைக்கூத்தல் 
  32. சிறந்த குணச்சித்திர நடிகை சிறப்பு விருது – அனுபமா குமார் – N4
  33. சிறந்த வில்லன் நடிகர் – பகத் பாசில் – மாமன்னன்
  34. சிறந்த வில்லன் நடிகர் சிறப்பு விருது – மிஷ்கின் – மாவீரன்
  35. சிறந்த வில்லி – சுனைனா – ரெஜினா
  36. சிறந்த வில்லி – சிறப்பு விருது – லயா – பகாசுரன்
  37. சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் – டிடி ரிட்டர்ன்ஸ்
  38. சிறந்த நகைச்சுவை நடிகர் சிறப்பு விருது – யோகிபாபு – குய்கோ
  39. சிறந்த நகைச்சுவை நடிகை – கோவை சரளா – கிக்
  40. சிறந்த நகைச்சுவை நடிகை சிறப்பு விருது – தீபா – டிடி ரிட்டர்ன்ஸ், சொப்னசுந்தரி
  41. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சஹஷ்ராஸ்ரீ – சித்தா
  42. சிறந்த குழந்தை நட்சத்திரம் – சிறப்பு விருது – ஸ்ரீமதி – பொம்மை நாயகி
  43. சிறந்த ஒளிப்பதிவு – ஏ.எம்.எட்வின் சகாய் – அஸ்வின்ஸ்
  44. சிறந்த படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி – மார்க் ஆண்டனி
  45. சிறந்த ஒலிப்பதிவு – சச்சின் – ஹரி – அஸ்வின்ஸ்
  46. சிறந்த ஒலிக் கலவை – சச்சின் – ஹரி – அஸ்வின்ஸ்
  47. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – NYVFXWALLAH – பொன்னியின் செல்வன்-2
  48. சிறந்த நடன இயக்கம் – பிருந்தா – பொன்னியின் செல்வன்-2
  49. சிறந்த சண்டை இயக்கம் – அன்பறிவ் – லியோ
  50. சிறந்த கலை இயக்கம் – தோட்டா தரணி – பொன்னியின் செல்வன்-2
  51. சிறந்த ஆடை வடிவமைப்பு – ஏகோ லகானி – பொன்னியின் செல்வன்-2
  52. சிறந்த ஒப்பனையாளர் – விக்ரம் கெய்க்வாட் – பொன்னியின் செல்வன்-2
  53. சிறந்த பின்னணி இசை – கவாஸ்கர் அவினாஷ் – மெமரீஸ்
  54. சிறந்த பாடல் இசையமைப்பாளர் – இசைஞானி இளையராஜா – பிடிச்சிருக்கா – மார்கழி திங்கள்
  55. சிறந்த பாடலாசிரியர் – இசைஞானி இளையராஜா – பிடிச்சிருக்கா – மார்கழி திங்கள்
  56. சிறந்த டூயட் பாடல் – பிடிச்சிருக்கா – மார்கழி திங்கள்
  57. சிறந்த ஜனரஞ்சகப் பாடல் – அதிருதா – மார்க் ஆண்டனி
  58. சிறந்த சோகப் பாடல்– கண்மணியே கண்ணீரை நிறுத்து – அழகிய கண்ணே
  59. சிறந்த பின்னணி பாடகர் – ராஜகணபதி – பிடிச்சிருக்கா – மார்கழி திங்கள்
  60. சிறந்த பின்னணி பாடகி – அனன்யா பட் – பிடிச்சிருக்கா – மார்கழி திங்கள்
  61. சிறந்த டிரெய்லர் – கொலை

தேர்வுகள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள், அர்ச்சனைகள், பொங்கல்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன..!

Our Score