நடிகர் நிகில், இயக்குநர் கேரி பி ஹெச், Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே கடந்த மே 15-ம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் சார்பில் கே.ராஜசேகர் ரெட்டி பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார். இந்நிறுவனத்தில் சரந்தேஜ் உப்பலபதி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தில் நாயகனாக நிகிலும், இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனனும், இரண்டாவது நாயகியாக சானியா தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆர்யன் ராஜேஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
மேலும் அபிநவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங்,, சோனியா நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வம்சி பட்சிபுளுசு மற்றும் மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஸ்ரீசரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
ஆக்ஷன் கலந்த ஸ்பை த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் கே ராஜசேகர் ரெட்டி எழுதி இருக்கிறார். பிரபல படத் தொகுப்பாளரான கேரி.பி.ஹெச் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை அடிப்படையாகக் கொண்டு, இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் கடந்த மே 15-ம் தேதியன்று கர்தவ்யா பாதையில் இந்த ‘ஸ்பை’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்தப் பாதையில் நடைபெறும் முதல் திரைப்பட டீஸர் வெளியிட்டு விழா இது என்பதால் அனைவரது கவனத்தையும் இந்தப் படம் ஈர்த்திருக்கிறது.
‘நீங்கள் எனக்கு ரத்தத்தை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்’ என வீரர் சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கம், இப்படத்தின் காணொளியில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளில், எதிர்வரும் ஜூன் மாதம் 29-ம் தேதியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.









