சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.ஜி. தியாகராஜன் இந்த ‘வீரன்’ படத்தை வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – தீபக் டி.மேனன், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை இயக்கம் – என்.கே.ராகுல், சண்டைப் பயிற்சி – மகேஷ் மேத்யூ, விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான், புகைப்படங்கள் – அமீர், ஆடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.
பிரபல விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி, இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.
மிக அரிதாக, படம் குறித்தான அறிவிப்பிலேயே வெற்றியைப் பதிவு செய்யும் சில கூட்டணிகள் தமிழ் சினிமாவில் உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் இந்த ‘வீரன்’ படத்தின் வெளியீடும் இந்த வெற்றியை முன் கூட்டியே தெளிவாக காட்டியுள்ளது.
சரியான திட்டமிடல் மற்றும் சரியான நேரத்தில் படத்தை முடித்தது என ஒட்டு மொத்தக் குழுவும் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் இந்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூன் 2-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘தண்டர்காரன்’ ஏற்கனவே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதோடு எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்கள் என வலுவான ரசிகர் பட்டாளம் இருப்பதால், படத்தில் அவரது இருப்பும், ஏ.ஆர்.கே.சரவனின் புதுமையான கதை சொல்லலும் பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று படக் குழு நம்புகிறது.
படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.









