full screen background image

‘அச்சம் என்பது இல்லையே’ படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது

‘அச்சம் என்பது இல்லையே’ படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது

தமிழ்த் திரைப்பட துறையின் முக்கிய தயாரிப்பாளரான லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’-மிஷன் சாப்டர்-1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளார்.

இந்தப் படத்தினை தயாரிப்பாளர்கள் எம்.ராஜசேகர், எஸ்.சுவாதி  இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அருண் விஜய்யுடன், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – விஜய், லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் – ஜி.கே.எம். தமிழ் குமரன், தயாரிப்பு – சுபாஸ்கரன், எம்.ராஜசேகர், எஸ்.சுவாதி, இணை தயாரிப்பு – சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா, இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், கதை & திரைக்கதை – ஏ.மகாதேவ், வசனம் – விஜய், ஒளிப்பதிவு – சந்தீப் கே.விஜய், படத் தொகுப்பு – அந்தோணி, சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – சரவணன் வசந்த், ஆடை வடிவமைப்பு – ருச்சி முனோத், ஒப்பனை – பட்டணம் ரஷீத், நிர்வாகத் தயாரிப்பு – வி.கணேஷ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – கே.மணி வர்மா, நிர்வாகத் தயாரிப்பாளர்கள்(யுகே) – சிவகுமார், சிவசரவணன், தயாரிப்பு நிர்வாகம் – மனோஜ் குமார்.கே, ஆடை வடிவமைப்பு –  மொடப்பள்ளி ரமணா, ஒலி வடிவமைப்பு – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், VFX – D நோட், புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா, Promotion & Strategies – ஷியாம் ஜாக், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன், விளம்பர வடிவமைப்பாளர் – பிரதூல் என்.டி.

சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக் கூடியது. தனித்துவமான கதைகள் மற்றும் நம்பிக்கைக்குரிய உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இதன் மூலம் இது போன்ற திட்டங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை சேர்க்கிறது.

லைகா புரொடக்‌ஷனின் இந்த லீக்கின் சமீபத்திய வரவாக எம்.ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரிப்பில், நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படமும்  இணைந்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது. மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது.

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக் கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Our Score