யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘பொம்மை நாயகி.’
நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநரான ஷான் இயக்குகிறார்.
ஒரு தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் பாசப் பிணைப்பை சொல்லும் படமாக, வெகுஜன மக்களை கவரும் விதத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் யோகி பாபு.
சென்னை, கடலூரில் படப்பிடிப்பு முடிந்து, தற்போது இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறது ‘பொம்மை நாயகி’ படம்.
இன்றைக்கு யோகி பாபுவின் பிறந்த நாளையொட்டி இந்த ‘பொம்மை நாயகி’ படத்தின் போஸ்டரை அந்தப் படக் குழு வெளியிட்டுள்ளது.









