PAVAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இன்று பூஜையுடன் துவங்கியது.
இந்தப் படத்தில் ‘பிக்பாஸ்-5’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிபி நாயகனாக நடிக்கிறார். இது இவர் நாயகனாக நடிக்கும் முதல் படமாகும். பவ்யா த்ரேகோ & யாஸ்மின் பொன்னப்பா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் ராதாரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன், ஜெய் ஆதித்யா, வின்சென்ட் நகுல் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
எழுத்து, இயக்கம் – பாலாஜி மாதவன். தயாரிப்பு – ஜெயச்சந்திரன் பின்னமேனி, பாலாஜி மாதவன், இணை தயாரிப்பு – பி,சந்திரசேகர், மாதவன் உண்ணி, மகேந்திரா முல்லத், ராஜேஷ் அரவிந்த்தக்சன், ஒளிப்பதிவு – ஜெயச்சந்திரன் பின்னமேனி, படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – சி.சாம், வசனம் – முருகானந்த் குமரேசன், கலை இயக்கம் – டி.பாலசுப்ரமணியம், நடனப் பயிற்சி இயக்கம் – தினேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், ஒப்பனை – சபரி கிரீசன், உடைகள் வடிவமைப்பு – ஜெனீபர் ராஜ், உடைகள் – ஷங்கர், போஸ்டர் ஸ்டில்ஸ் – தி ரெட் பாக்ஸ் போட்டோகிராபி, தயாரிப்பு நிர்வாகம் – ஜெ.கே., வி.எஃப்.எக்ஸ். – ஜெமினி, ஒலிப்பதிவு – சித்தார்த் துபே, லேப் ஜெமினி, பத்திரிகை தொடர்பு – டைமண்ட் பாபு.
இந்தப் படத்தை தயாரித்து, எழுதி, இயக்குகிறார் அறிமுக இயக்குநரான பாலாஜி மாதவன். இவர் இயக்குநர் மிஷ்கினிடம் மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளோர். மேலும் நடிகர் மாதவன் இயக்கிய (Rocketry:The Nambi Effect) படத்தில் துணண இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
ஒரு விபத்தினால் 13 வயது சிறுவனும், ஒரு இளம் காதல் ஜோடியும் நிர்க்கதியான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அச்சூழல் அவர்களை இணைக்கிறது. குற்றவுணர்ச்சியாலும், பழி வாங்கும் உணர்ச்சியாலும் அணலக்கழிக்கப்படுவர்கள் கடைசியாக எப்படி தங்களுக்கான நீதியைப் பெறுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மிஷ்கின், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சக்தி வாசு, மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர் பாலாஜி மாதவன், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவுள்ளது.












