full screen background image

அரசு போக்குவரத்து கழகங்களின் அவலங்களைச் சொல்ல வரும் ‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படம்

அரசு போக்குவரத்து கழகங்களின் அவலங்களைச் சொல்ல வரும் ‘தோழர் வெங்கடேசன்’ திரைப்படம்

‘காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் மாதவி  அரிசங்கர் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தோழர் வெங்கடேசன்’.

இந்தப் படத்தில் அறிமுக  நாயகன்  அரிசங்கர்,  அறிமுக  நாயகி  மோனிகா  சின்னகொட்லா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வேதா  செல்வம், இசை – சகிஷ்னா, படத் தொகுப்பு – மகாசிவன், ராஜேஷ் கண்ணா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – மகாசிவன்.

ஒரு எளிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விபத்தும்… அதோடு தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எந்தவிதமான தாக்கங்களையை, வலிகளை, வேதனைகளை பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்லும் படம்தான் இந்த தோழர் வெங்கடேசன் திரைப்படம்.

ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்தவிதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் படம்தான் இந்த ‘தோழர்  வெங்கடேசன்’. 

இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளைத் திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்றக் காட்சிகளை பல கோணங்களில் டிரான் தொழிற்நுட்பத்துடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் திருப்பு முனையான கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் மோஷன் கண்ட்ரோல்  காமிரா உதவியுடன்  படமாக்கியுள்ளது  குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திரைப்படம் அரசு போக்குவரத்துத் துறையில் இருக்கும் அவலங்களை சுட்டிக் காட்டுவதால் அத்துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score