full screen background image

‘ஜீவி’ திரைப்படம் ‘U’ சான்றிதழ் பெற்றது..!

‘ஜீவி’ திரைப்படம் ‘U’ சான்றிதழ் பெற்றது..!

‘மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு.

குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். அப்படியொரு திரைப்படம்தான் விரைவில் வரவிருக்கும் ‘ஜீவி’.

இந்தப் படத்தை வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் எம்.வெள்ளபாண்டியன் தயாரித்துள்ளார்.

இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு – பிரவீன் குமார், கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – வைர பாலன், லைன் புரொடியூஸர் – ஐ.பி.கார்த்திகேயன், கதை, வசனம் – பாபு தமிழ், இயக்கம் – வி.ஜே.கோபிநாத்.

சமீபத்தில் இந்த ‘ஜீவி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.

மிகச் சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை  குழு உறுப்பினர்கள், படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநரான வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, “ஒரு அறிமுக இயக்குநரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ் பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த  உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

விஞ்ஞானம் மற்றும் மாய வித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன  என்பதை வலியுறுத்தும் ஒரு திரில்லர் படத்தை தர முயற்சி செய்திருக்கிறோம். ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் அணுகுமுறையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறோம், இது பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன்” என்றார்.

Our Score