full screen background image

அண்ணன்-தங்கை பாசத்தைக் காட்ட வரும் ‘காத்தாடி மனசு’ திரைப்படம்

அண்ணன்-தங்கை பாசத்தைக் காட்ட வரும் ‘காத்தாடி மனசு’ திரைப்படம்

தேஜா புரொடக்ஷன்ஸ் வழங்கும், கே.எஸ்.டி. பிலிம் மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘காத்தாடி மனசு’.

இந்தப் படத்தில் மெளரியா, விஜய் லோகேஷ், யுகா, அனிகா, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, யுவராணி, ‘கோலிசோடா’  சுஜாதா, ‘கானா’ பாலா, சித்ரா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். 

எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும், அண்ணன்-தங்கை உறவென்பது ரத்த உறவு. அண்ணன், தங்கை உறவை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். ‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ வரிசையில் அண்ணன், தங்கை உறவின் பாசப் பிணைப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் படம் இந்த ‘காத்தாடி மனசு’.

kaathaadi manasu movie

அண்ணனாக தம்பி ராமையாவும், தங்கையாக சுஜாதாவும் இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மகளுக்கும், சுஜாதாவின் மகனுக்கும் ஏற்படும் காதல்.. அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் கிராமத்து காவியம்தான் இந்த ‘காத்தாடி மனசு’ திரைப்படம்.

ஒளிப்பதிவு – ஆர்.வேல், இசை – ஸ்ரீசாஸ்தா, பாடல்கள் – கானாபாலா, சுகுமார், ஞானவேல், ஸ்ரீசாஸ்தா, படத் தொகுப்பு – சுஜித் சகாதேவ், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்புராயன், நடனம் – ஸ்ரீதர், தயாரிப்பு – எஸ்.சேதுராமன், இணை தயாரிப்பு – ஹெச்.பிரதாப்குமார், பி.எஸ்.ஜெயக்குமார், எஸ்.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.எஸ்.மாதவன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கம்பம், தேனி, திண்டுக்கல்,  புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

‘காத்தாடி மனசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்.

 

Our Score