full screen background image

இயக்குநர் ராஜூ முருகன் – நடிகர் ஜீவா இணையும் ‘ஜிப்ஸி’ திரைப்படம்..!

இயக்குநர் ராஜூ முருகன் – நடிகர் ஜீவா இணையும் ‘ஜிப்ஸி’ திரைப்படம்..!

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குநரான ராஜூ முருகன், தனது அடுத்தப் படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைகிறார்.

இந்தப் படத்திற்கு ‘ஜிப்ஸி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். வித்தியாசமான கதை என்பதால் கதையைக் கேட்டவுடனேயே நடிகர் ஜீவா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.  

இந்த படத்தை ‘தேசிங்கு ராஜா’, ‘மனம் கொத்திப் பறவை’ ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த ‘ஜிப்ஸி’ திரைப்படம் கமர்ஷியல் கலந்த  சமூக வாழ்வியல் கதையைச் சொல்லப் போகிறதாம். இந்த படத்திற்காக இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ராஜூ முருகன் திட்டமிட்டுள்ளார்.

இயக்குநர் ராஜூ முருகன் தற்போது பாலாவின் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Our Score