அனைவரையும் கவரும் பட தலைப்புகள் அமைவது எளிதல்ல. அது மாதிரி அமைந்து அது தற்கால பரபரப்பான நிகழ்வோடு ஒன்று சேர்ந்தால், நிச்சயம் அது மக்களை ஈர்க்கும். இது போன்ற ஒரு தலைப்புதான் ‘RK நகர்’.
இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் ‘ ப்ளாக் டிக்கெட் கம்பெனி’ நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தில் வைபவ் மற்றும் சனா அல்தாப் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். சம்பத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரேம்ஜி அமரன் இசையில், S.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், பிரவீன் K.L.படத் தொகுப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை, தமிழ் சினிமா துறையில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, சமீபத்தில் ‘மெர்சல்’ மூலம் அசுர வெற்றியை தந்த ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. இது ‘RK நகர்’ படத்தின் வர்த்தக பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது.
இப்படத்தை ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ விரைவில் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாய் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.









