பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்திடம் தங்களின் ஒட்டு மொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும், நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே இந்த ‘பொது நலன் கருதி’ திரைப்படம்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், சந்தோஷ், ஆதித் அருண், யோக் ஜாப்பி, அனு சித்தாரா, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி, வழக்கு எண் முத்துராமன், சுப்ரமணியபுரம் ராஐா மேலும் பலர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை, வசனம், இயக்கம் – சீயோன்.
“இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்து கொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருப்பது அதிகார வர்க்கத்தின் சுயநலன்தான்.
காலம், காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது. பின்பு அதை உண்மை என நம்ப வைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள்.
அதன் பின்பு எளிய மனிதர்கள் தங்கள் மீது கோபம் கொண்டு எதுவுமே செய்ய முடியாதபடி நிர்வாக அமைப்பை கட்டமைத்துக் கொண்டு எப்படி செல்வாக்குள்ள மனிதர்களாய் தங்களை உருவாக்கி கொள்கிறார்கள் என்பதினை திரைக்கதையின் மூலம் காட்டியிருக்கிறோம்.
இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமளிக்காது மக்களுக்கு உண்மையை சொல்வதுதான் இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கம்..” என்றார் இப்படத்தின் இயக்குநர் சீயோன்.











