full screen background image

70 லாரி தண்ணியை அருவியில் ஊற்றி படம் பிடித்த புத்திசாலிகள்..!

70 லாரி தண்ணியை அருவியில் ஊற்றி படம் பிடித்த புத்திசாலிகள்..!

பெஸ்ட்  மூவிஸ்  நிறுவனத்தின் சார்பில்  எம்.தனசண்முகமணி  தயாரித்துள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.

படத்தின் கதாநாயகனாக குரு ஜீவா அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக ‘பைசா’  படத்தில் நாயகியாக நடித்த ஆரா  நடித்துள்ளார். மேலும், ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர்,  இமான் அண்ணாச்சி,  ஸ்ரீரஞ்சனி, மனோ,  நமோ நாராயணன்  ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.  கதை,  திரைக்கதை, வசனம்,  எழுதி  இயக்குநராக  அறிமுகமாகிறார்  பா.தண்டபாணி.

தான்  காதலிக்கும்  பெண்ணின்  தந்தை  ஊர்  பஞ்சாயத்து  தலைவர் என்பதற்காக, தன்  காதலியை  பார்க்க தோணும்போதெல்லாம்  ஒரு  சின்ன விஷயத்தை  பெரியதாக்கி,  அதையே  பஞ்சாயத்தாக  கூட்டி,  கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில்  குரு  ஜீவா  நடித்துள்ளார்.

இப்படத்தின்  இறுதிக்கட்ட  படப்பிடிப்பு  கேரளாவில்  அடர்ந்த  காட்டுப் பகுதியில் நடைபெற்றது. ஒரு  முக்கிய காட்சியை  படமாக்கும்போது,  மெயின் ரோட்டிலிருந்து  3  கி.மீ  அருகில்  உள்ள  அருவியில்  படப்பிடிப்பை நடத்த  முடிவு செய்திருக்கிறார்கள்.  லொக்கேஷன்  பார்க்கும்போது  அருவியில்  வந்த  தண்ணீர் படப்பிடிப்பின்போது  வராததால், 70  லாரிகளில்  தண்ணீர்  வரவைக்கப்பட்டு படப்பிடிப்பு  நடத்தப்பட்டுள்ளது.

Our Score